ஹிந்தி தெரியாது போடா
இன்றைய நயினாரின் உணர்வுகளில்
ஹிந்தி தெரியாது போடா|hindi theriyathu poda|தமிழ் மொழி|Nynarin Unarvugal
எங்கள் வழி
இது எங்கள் விழி
இனிக்கும் எங்கள் தமிழ் மொழி
ரசிக்கலாம்
ரசனைக்கெல்லாம்
வசிப்பிடமிது
வசப்படுத்தும்
வசியப்படுத்தும்
விசித்தரங்களை
வித்தியாசப்படுத்தும்
இன்பத் தமிழ்தான்
சீண்டினால்
துன்ப உமிழ்தான்
எட்டுத்திக்கும்
தித்திக்கும்
எட்டவில்லையெனில்
பத்திக்கும்
நெருங்கி வா
கிறங்கிப் போவாய்
நெருக்க வந்தால்
நொருங்கி போவாய்
இது ஆதிமனிதனின்
மௌனத்தை மூடிய
புதை குழி
அறிவை பிரசவிக்கும்
கர்வத்தின் சூல்
இது மொழி மட்டுமல்ல
புவியை சுழல விட்ட சுழி
✨✨✨✨✨✨✨✨
நயினார்
Comments