‘இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால் விடாதே!’ என்று கூறி உலகத்தை தனது சர்வாதிகாரத்தால் ஆண்ட அடால்ப் ஹிட்லரின் நினைவு தினம் இன்று.
சிறையில் இருந்தபோது ‘எனது போராட்டம்’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார். இதில், உலகை வழி நடத்த தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டுமே என்று எழுதினார் ஹிட்லர்.
1928இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது. ஆனால், ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.
தன்னுடைய கட்சியின் பெயரை ‘நாசி கட்சி’ என்று பெயர் மாற்றி, நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழி வகுத்தார்.
ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார். 1933 ஜனவரி 30ஆம் தேதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.
பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜெர்மனின் சர்வாதிகாரியாக மாறினார்.
ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டபோது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டு விட்டன.
‘விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப்போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். எதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று எச்சரித்தவர்.
ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது இவரது காலத்தில்தான்.
ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்ததற்கு காரணம் என்னவெனில் மாசு அடையக்கூடாது என்று அவர் கொண்டு வந்த சட்டம்தான்.
ஹிட்லரின் ஆட்சிக்காலம் பன்னிரண்டு ஆண்டுகள். அதில் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.
சாப்ளினின் முதல் பேசும் படம் ‘தி கிரேட் டிக்டேட்டர்’. அதில் ஹிட்லராகவும் யூத இனத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளியாகவும் இரண்டு வேடங்களில் நடித்து சாப்ளின் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பார்.
ஒருமுறை காந்தி தனது நண்பருக்கு, மடல் எழுதுகிறார். அந்த மடலில்... ‘அன்பு தோழனே போரிட வேண்டாம், போரை நிறுத்திவிடு’ என கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்த நண்பன் வேறு யாருமில்லை... ஹிட்லர் தான்!
இயற்கை வைத்தியர் டாக்டர் ரேவதி வழங்கும் காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை | Marul Katralai/Snake Plant for Ear Problems video link by Dr.S.Revathi's Vlog
சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது , எந்நாளும் தனது சொல்லாற்றலால் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆற்றலை கவிதை வழி தந்தவரும், விவேகத்துடன் வேகம் கலந்து, அன்றும், இன்றும், என்றும் நம் தமிழ்த்திருநாட்டில் தனக்கென, தனி அடையாளத்தைக் கொண்டு புகழுடன், நம்மோடு வாழ்ந்து வருபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள். இன்று அவரை நினைவில் கொள்வோம். தேசத்துக்காக, தன் கவிதை வரிகளால், மக்களை விழிப்படையச் செய்த முண்டாசுக் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் அவர்கள். எட்டயபுரத்தில் 11.12.1882 ல் பிறந்த அறிவுச் சுடர், சமஸ்கிருதம், இந்தி. வங்காளம், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளை கற்றுத் தெளிந்தார். தமிழ்மொழியின், இலக்கண இலக்கியங்களை, முறைப்படி பயின்றதன் காரணமாக, 1904 ஆம் ஆண்டு, சுதேசமித்திரன் இதழின் உதவி ஆசிரியர் ஆனார். பின்னர் அரசியலில் தீவிரம் கொண்டபோது கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. யுடன் தொடர்பு ஏற்பட்டது, கல்கத்தாவில் நடைபெற்ற, காங்கிரஸ் சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது...
மே 29, உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி பிறந்த தினம் இன்று. சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் கவுரவ முதல்வராகப் பணிபுரிந்தபோது, ரவீந்திரநாத் தாகூரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். அவர்கள் இடையே மலர்ந்த நட்பு இறுதிவரை நீடித்தது. பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளும் இந்த இதழ்களில் இடம்பெற்றன. காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், சி.எஃப்.ஆண்ட்ரூஸ், பிரேம்சந்த், லாலா லஜபதிராய், சகோதரி நிவேதிதை, ஜாதுநாத் சர்க்கார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தனர். 20-ம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகாலம் வரை, ஒன்றுபட்ட இந்தியாவின் முன்னணி தலைவர்கள், ஆட்சியாளர்களால் இந்த 2 இதழ்களும் மிகவும் மதிக்கப்பட்டன. இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. இதழியல், தேசத் தலைவர்கள் தொடர்பான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘இந்தியா அண்டர் பாண்டேஜ்’ என்ற நூலை தனது அச்சகத்தில் அச்சிட்டதற்காக இவருக்கு அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது....
Comments