டாணாக்காரன்’.படத்தைப்பற்றிய என்னுடைய பார்வை’.

 


நான் சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்த  டாணாக்காரன்’.படத்தைப்பற்றிய என்னுடைய பார்வை’.

ஆங்கிலேயர் கையிலிருந்து விடுப்பட்டு அரசியல்வாதியிடம் சிக்கியிருக்கும் போலிஸ் துறை  சிஸ்டத்தைப்பற்றிய படம்தான் 'டாணாக்காரன்'.

ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிப்பில் கலக்கியிருக்கிறார்

, ‘ஜெய்பீம்' படத்தில் போலீஸ் எஸ்.ஐயாக நடித்து நம்மை நடுங்கவைத்த தமிழ் இயக்கியிருக்கிறார்

கதை சுருக்கமாக

காவலராக வேண்டும் என்ற  கனவை சுமந்துகொண்டு காவல்துறை பயிற்சிப் பள்ளிக்குள் செல்லும்  இளைஞர்கள் கூட்டம் மற்றும்  அவர்களுடன், 1982-ம் ஆண்டு நடந்த ஆட்சிக் கலைப்பினால், காவல்துறைக்கு தேர்வாகியும் ஆணை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்ட வயதான சிலரும் இணையவும் , இந்த இரண்டு தரப்பினரும்  மேற்கொள்ளும் பயிற்சியில்  பாரபட்சம் காட்டப்படுகிறது

மற்றும்  காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் அநீதிகள், அதை எதிர்ப்பவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள் என்பதை சொல்கிறான் இந்த  'டாணாக்காரன்'

. எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு திமிறி எழாமல் அமைதியாக  காரியத்தை முடிக்க வேண்டிய கதாபாத்திர தன்மையை உணர்ந்து

அறிவாக விக்ரம் பிரபு .. சில க்ளோசப் காட்சிகளில் நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் ஆளாக கேள்வி கேட்பது, எந்த பனிஷ்மெண்ட் கொடுத்தாலும் அதை செய்து முடித்துவிடுவது என ஒரு சில இடங்களைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களில் ஹீரோயிஸம் எட்டிப்பார்க்கவில்லை. இயல்பாக இருக்கு அவர் நடிப்பு

 'கும்கி' படத்துக்குப் பின்னர் இவருக்கு நல்ல  வேடம். அதைச் சிறப்பாக செய்திருக்கிறார்.என சொல்லவேண்டும்

அடுத்து  ஈஸ்வர மூரத்தியாக லத்தியுடன் பரேடு கிளப்பும் அதிகாரியாக லால். கதாப்பாத்திரம். அவர் கையிலிருந்து விழும் ஒவ்வொரு அடியிலும் காக்கியின் ஆக்ரோஷம் தெரிய இவரை அடக்க யார் வருவாங்கனு நினைக்க வைக்கிறது

. முத்து பாண்டியாக வரும் மதுசூதனராவ்.நாம் பார்த்துப் பழகிய  இரக்கமில்லா காக்கிகளை நினைவுக்குக் கொண்டுவருகிறார்

 

. நாயகியாக அஞ்சலி நாயர். சீரியஸாக சுற்றும் விக்ரமை துரத்தி துரத்தி காதலித்தாலும் அவரின்  காதல் காட்சிகள் மனதில் ஒட்டவேயில்லை. செயற்கையான  கதாபாத்திரம் இது

 

அடுத்து குறைவான காட்சிகளே வந்தாலும் நேர்மையான காவல்துறை அதிகாரியாக போஸ் வெங்கட் நம்மை கவர்கிறார்,வர்இவர்  பேசும் வசனங்கள்தான் இந்த படத்தின் ஆணிவேர்

 தன்னை அசிங்கமாக திட்டிய உயரதிகாரியைக் கோபத்தில் தாக்கியதால், இன்ஸ்பெக்டர் ஆகவேண்டியர் காவலராகவே தொடர்கிறார் என்ற எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு இதயம் கனக்கச் செய்துவிடுகிறது. வயதான  குழுவில் தன் அழுகையின் மூலம் சித்தப்புவாக வரும் பிரகதீஸ்வரன் நம்மை  கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார் என சொல்லலாம்

.

 இன்ஸ்பெக்டர், ஏசி மட்டுமல்ல பயிற்சிப்பள்ளியின் முதல்வராக வரும் .பி.எஸ்ஸும் மிக தத்ரூபமாக கதிகலங்கவைக்கிறார்.

.

, படத்திற்கு மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்

. ட்ரோன்ஷாட்களும், ஃபோகசிங் முறை கச்சிதம்.

 லால் வரும் இடத்தில் பின்னணி இசை அமர்க்களம்

ஆனால் பல காட்சிகளில் ஜிப்ரான் கூடுதல் கவனம் செலுத்தவில்லை

எடிட்டிங்  பிலோமின் ராஜின் படத்தின் நீளத்தை சற்று  குறைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்

. சாமின் சண்டைக் காட்சிக்காட்சிகளும் திரைக்கதைக்கு பலம்

இயக்குநர் தமிழ் 'டாணாக்காரன்' படத்துக்காக மிக முக்கியமானதும் வித்தியாசமானதுமான கதைக்களத்தை தேர்வு செய்ததை பாராட்டவேண்டும்

, படம் தொடங்கியதிலிருந்து எந்தவித விலகலும் இல்லாமல் கதைக்குள் அழைத்துச் செல்வதால் அந்த வகையில் திரைக்கதை ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு

. காவல் நிலையத்தில் நடக்கும் கொடூரங்களை நாம் பார்த்துப் பழகியுள்ளளோம் ,இந்த கதைக்களமான  'காவல்துறை பயிற்சிப் பள்ளி'யில் நடக்கும் பிரச்சினை மற்றும்  நடைமுறைச் சிக்கல்கள் நமக்கு புதுசாக தெரிவதால் ஆர்வமாக கதையுடன் ஒன்றிவிடுகிறொம்

கதையின் பிளஸ்

படத்தின் ப்ளஸ் என்றால் லத்தியால் அடித்ததுபோன்று பேசப்படும் வசனங்கள் ,கதைக்களன், கதாப்பாத்திர தேர்வு,, அவர்களின் இயல்பான  நடிப்பும்தான்

. ”டேய் தம்பி இந்த சிஸ்டம் இருக்கே, இது மொரட்டு வெள்ளக்காரனுக்கும் முட்டாத்தனமான அரசியல்வாதிக்கும் பிறந்த குழந்தைடா . இங்க நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவன் தான் கஷ்டப்படுவான்என்கிற விரக்தியான வசனம், ‘அதிகாரம் இல்லாத உணர்ச்சி உன்னை எரிச்சி கொன்னுடும்’, ’இங்க சிஸ்டம் உனக்கு எதிரானது. அந்த சிஸ்டத்தில் அதிகாரத்தை கைப்பற்ற தேவையான அத்தனை கதவுகளையும் திறந்து வச்சிருக்கேன். அதிகாரத்தை கைப்பற்றி சிஸ்டத்தை சரி பண்ணிக்கோங்க. சிஸ்டத்தை சரிபண்ணவே நாம் அதிகாரத்தை கைப்பற்றவேண்டியிருக்கு’" என்று சுட்டிக்காட்டும் போஸ் வெங்கட்டின் பல்வேறு வசனங்கள்

, சாதியை வைத்து இழிவுப்படுத்த முயலும் லால் பேசும் வசனங்கள் போலீஸ் வேலைக்கு மட்டுமல்ல அத்தனை அரசுப் பணிகளுக்கும் வந்து உயரதிகாரிகளின் நெருக்கடிகளாலும் சாதிய வன்மங்களாலும் பணியை விட்டு விலகிச்செல்ல நினைக்கும் ஒவ்வொருவர் மனதிலும் கட்டாயம் பதியும்

 

இந்த அழுத்தமான வசனங்கள் பல முன்னாள் .பி.எஸ்கள், ..எஸ்.கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி சிஸ்டத்தை சரிசெய்யாமல் வேலையை விட்டு வந்துகொண்டிருப்பதை நினைவூட்டுவதால்  அங்கிருந்தபடியே தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு நேர்மையாக போராட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ’புத்திசாலித்தனம்முக்கியம் என்பதை விழிப்புணர்வூட்டிய தமிழுக்கு சல்யூட்.

 

. காவல்துறை அதிகாரியால் நடப்பட்ட ஒரு மரத்தை காக்கும் பொறுப்பிலிருக்கும் காவலர், மரம் நடப்பட்ட காரணம் கடந்தும், தேவையே இல்லாமல் அந்தப் பணியை தொடர்ந்துகொண்டிருப்பார். சொல்லப்போனால் படமும் அதைத்தான் பேசுகிறது. சுதந்திரப் போராட்டம் குறித்து சிந்திப்பதை தடுக்கவும், மக்களை ஒடுக்கவும், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட காவல்படையும், அதன் பயிற்சி முறைகளும் எவ்வித கேள்வியுமில்லாமல் தொடர்ந்து வருவதை மேற்கண்ட காட்சியின் வழியே உணர்த்திருப்பது சிறப்பான முயற்சி

 

மைனஸ்

படத்தின் பிற்பகுதியில் பலவீனமான சில காட்சிகளால் படத்துடன் ஒன்ற முடியல

 விக்ரம் பிரபுவின் ஃப்ளாஷ்பேக் பெரிய அளவில் எந்தக் தாக்கத்தை கொடுக்கவில்லை

 லாலுக்கு கொடுக்கப்படும் அதீத பில்டப் வசனங்கள் தொடக்கத்தில் விறுவிறுப்பை கூட்டினாலும், அடுத்தடுத்த காட்சிகள் அலுப்புதான்ல

லால் - விக்ரம் பிரபு போட்டியின் இறுதிக் காட்சிகள் பிரமாதமாக இருக்கும் என நினைத்தால் படு சொதப்பல் ஜெயிப்பதற்காக க்ளைமாக்ஸில் செய்யும் தந்திரங்கள் போன்றவை ஏற்கனவே பார்த்த வழக்கமான சினிமா காட்சிகளைப்போல் இருப்பதால் மனதில் ஒன்றவில்லை

படத்தின் ஓப்பனிங்கிலிருந்து எண்டிங்வரை ஆங்கிள்தான் மாறுகிறதே தவிர, ஒரே லொகேஷனில் எடுக்கப்பட்டது என்பது அயர்ச்சி

. முருகன் என்கிற கதாப்பாத்திம்  கருணை அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், இப்படி போலீஸ் வேலைக்கு உடற்தகுதியில்லாத நபரை நிச்சயமாக தேர்ந்தெடுத்திருக்கவே மாட்டார்கள் என்பது நிஜம்த.

 மேலும், சீனியாரிட்டி அடிப்படையிலான வழக்குகள் நடப்பது உண்மைதான்.என்பது தெரிகிறது

 ஆனால், 45 வயதில் காவலர் பயிற்சிப்பள்ளியில் ட்ரெயினிங் எடுக்க வருகிறார்கள் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

 

காவலர் பயிற்சிப் பள்ளியில் கட்டளையை மீறினால் மைதானத்தில் மிகக்கடுமையான பனிஷ்மெண்ட்கள் கொடுக்கப்படும்  என்பதை அறிவோம்

 ஆனால், பயிற்சி ஆசிரியோரோ லத்தியால் அடிப்பதும் , காலால் எட்டி உதைப்பதும்  போன்ற காட்சிகள்  நம்பும்படியாக இல்லை. க்ளைமாக்ஸ் திடீரென்று முடிகிறது. ஒரு மெடலுக்காக இவ்வளவு ப்ளான் எல்லாம் செய்து, தோற்ற லாலுக்கு கொடுப்பார்களா என்பது பெரிய காமெடி

லால் ஏன் இப்படி செய்கிறார். இதனால் அவருக்கு என்ன லாபம்.அவர் குடும்பத்தில் சிக்கலா அல்லது மனநலம் குன்றியவரா என கேட்க தோன்றும்

காவலர்கள் பயிற்சி முடித்து போகக்கூடாது என 10 வருடங்களாகஇப்படி கொடுமை படுத்துபவர்  பற்றி யாருமே கம்ளயண்ட் பண்ணணல என்பதும் இப்படி பயிற்சிக்கு வருபவர்களை சித்ரவதை படுவார்கள் என்பதும் இது அரசாங்கத்துகக்கு தெரியாது என்பதை நம்ப முடியல

கதாநாயகன் பற்றி பேசப்பட வெற்றி பெற ஒரு டப் வில்லன் வேண்டும் அது இந்த படத்தில இருக்கிறது

இப்படி பல குறைகள் தென்பட்டாலும் 'டாணாக்காரன்' காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சிக்கல்களை பேசியதற்காக மட்டுமல்ல... அதிகம் அறியப்படாத கதைக்களத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் சென்ற வகையிலும் கவனத்துக்குரிய முக்கியப் படைப்பாகிறது.


, இன்னும் கொஞ்சம் பயிற்சி இருந்திருந்தால் மிகப்பெரிய அளவுக்கு இந்தடாணாக்காரன்’.படம் பேசப்பட்டிருக்கும்

.

. உமாதமிழ்

.

...

.

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,