குளியலறையில் மயக்கம்
குளியலறையில் மயக்கம்
நம்மில் ஆரோக்கியமான பலர் திடீரென குளியலறையில் மயக்கம் போட்டு விழுந்த பிறகு பக்கவாதம் மற்றும் பின் மண்டையில் அடிபட்டு உயிரிழப்பு போன்ற கவலையான செய்திகள் பலவற்றை நாம் அடிக்கடி கேள்விப் படுகிறோம்.
பெரும்பாலும் குளியலறை தவிர வேறொரு இடத்தில் விழுவதை நாம் ஏன் கேள்விப்படவில்ல?
அது போல் குளியலறையில் திடீர் மயக்கம் என்பது நம்முடைய தவறான குளிக்கும் முறையால் வருவதே.
பெரும்பாலோர் குளியலறையில் ஷவரைத் திறந்து அல்லது கப்பில் நீரை மொண்டு முதலில் தலையை நனைப்பர்.இது முற்றிலும் தவறான செயல். ஏனென்றால்,அப்படி முதலில் தலையை நனைக்கும்போது,தலை ஈரமாகி குளிர்ச்சியடையும்.அதனால் தலையை சூடாக்க இரத்தம் நம் தலையை நோக்கி வேகமாகப் பாயும்.
அச்சமயத்தில் இரத்தம் பயணிக்கக்கூடிய நாளங்கள் கழுத்துப் பகுதியில் (ஈரத்தினால்) குறுகினால், அது இரத்த நாளங்களை சிதைப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மண்டையோட்டினுள் இருக்கும் மூளைக்குச் சென்று கொண்டிருக்கும் ரத்தம்,மண்டையோடு திடீரென குளிர்ச்சியாவதால் ரத்தநாளங்கள் சுருங்கி வெடிப்பதற்கும், மூளைப் பகுதியில் ரத்தம் கசிந்து மயக்கம்,மூளை நரம்புகள் பாதிப்பால் பக்கவாதம் போன்றவை நிகழக் காரணமாகி விடுகிறது.
இது வழக்கமாக குளியலறையில் மட்டுமே நடப்பதால், நமக்கும் நமது உற்றார் உறவினர்களுக்கும் இதுபோன்று நிகழாமல் இருக்கவே இந்த விழிப்புணர்வு பதிவு.
நாம் குளிக்கும்போது முதலில் எதில் இருந்து நீர் ஊற்ற தொடங்கி பின் தலைக்கு எப்படி நீர் ஊற்ற வேண்டும் என்பதை வரிசை படியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1.ஈரப்பதம் பாதத்தின் அடிப் பகுதியிலிருந்து தொடங்க வேண்டும்.
2.பாதத்திற்கு மேல் உள்ள முழங்கால் பகுதி.
3.தொடைகள்.4.அடிவயிறு.
5.தோள்பட்டை.
6. 5-10 விநாடிகள் நீர் ஊற்றாமல் சிறு இடைவேளை.
இச்சமயத்தில் நம் உடலில் இருந்து நீராவி அல்லது காற்று நிரம்பி வழிவது போல் உணருவோம்.பின்னர் கடைசியாக வழக்கம் போல் தலைக்கு நீரூற்றி குளிக்கலாம்.
முதலில் நேரடியாக தலைக்கு குளிர்ந்த நீர் ஊற்றுவது என்பது, சூடான கண்ணாடி கிளாஸில்,குளிர்ந்த நீரை நிரப்பினால்,
கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டு உடைவது போலவே நம் ரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு பக்கவாதம் வர வைக்கும் செயலாகும்.
ஆற்றிலோ,குளம்,குட்டைகளிலோ,ஏரி,கண்மாய்களிலோ காலை முதலில் வைத்து மெல்ல மெல்ல இறங்கி கழுத்தளவு நீர் வந்ததும் கை முதுகு இவற்றைத் தேய்த்து(தலையை முங்குவதற்கு முன் சற்று இடைவெளி விட்டு) தலையை முங்குவது போலவே குளியலறையில் குளிக்கும்போதும் கடைசியாகவே தலையை நனைக்க வேண்டும்.
தவறான குளியல் முறையின் காரணமாகவே, பலருக்கு பக்கவாதம் அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.
இந்த பாதம் முதல் தலைவரை நீரூற்றி குளிக்கும் முறையானது அனைத்து வயதினருக்கும் பொருத்தமானது.
அதிலும் குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ஒற்றைத் தலைவலி / தலைவலி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது.
அன்றாட வாழ்வில் நம்முடன் ஒன்றிப்போன குளியல் என்ற முக்கியமான பகுதியினை முறையுடன் செய்து, ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு முற்படுவோம்!!.
சுகாதார விழிப்புணர்வு செய்தி
Comments