உங்க வாட்ஸ்அப் பாதுகாப்பாக இருக்கா?
உங்க வாட்ஸ்அப் பாதுகாப்பாக இருக்கா? இந்த 7 டிப்ஸ் உடனே செக் பண்ணுங்க
உங்கள் WhatsApp கணக்கில் two step verification enable செய்வது, தனியுரிமையை மேம்படுத்த செய்யக்கூடிய முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். இதை ஆன் செய்வது மூலம், அங்கீகாரம் இல்லாத லாகின்களை தடுத்திட உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இதனை செய்திட WhatsApp Settings/ Account/ Two Step Verification and ‘Enable’ button கிளிக் செய்ய வேண்டும். புதிய சாதனத்தில் உங்கள் வாட்ஸ்அப் லாகின் செய்கையில், நீங்கள் தான் என்பதை உறுதி செய்திட ஆறு டிஜிட் எண் உள்ளிடுமாறு கேட்கப்படும். இந்த ஆறு டிஜிட் பின் இல்லாமல், உங்கள் கணக்கை வேறு யாராலும் அணுக முடியாது.
Check unknown links
malicious links வருவது வாட்ஸ்அப் மட்டுமின்றி ஜிமெயில் முதல் இன்ஸ்டாகிராம் வரை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இத்தகைய லிங்க மூலம் உங்களை ஏமாற்றி கணக்கின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. போலியான லிங்க்களை கொண்டுள்ள போலியான மெசேஜ்கள், உங்கள் குடும்ப உறுப்பினர் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் டார்கெட் செய்து அனுப்புவார்கள். அதில் வித்தியாசம் கண்டறிவது கடினமான ஒன்றாகும்.
இருப்பினும், நீங்கள் இத்தகைய ஆபத்தான இணையதளங்களுக்கு சென்று மாட்டிக்கொள்வதை தவிர்க்க, உங்களுக்கு வரும் லிங்கை ஒருமுறை சோதித்து பார்ப்பது நல்லதாகும். அந்த லிங்கை காப்பி செய்து, அதனை, ScanURL, PhishTank, Norton Safe Web போன்ற தளங்களில் பதிவிட்டு உண்மை நிலையை கண்டறியலாம்.
Enable Security Notifications
வாட்ஸ்அப் பாதுகாப்பு நோட்டிபிகேஷன்கள், உங்களது சாட் பாதுகாப்பாக இருப்பதை தெரிவிக்க உதவுகிறது. வாட்ஸ்அப் தொடர்பு கொள்ளும் இரண்டு சாதனங்களுக்கு இடையே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை செயல்படுத்துகிறது. இரண்டு கணக்குகளில் ஒன்று புதிய சாதனத்திற்கு மாற்றப்பட்டால், மாற்றத்தை அறியும் வகையில் அனைத்து சாட்களுக்கும் விரைவான எச்சரிக்கை அனுப்பப்படும்.
இதன் மூலம், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு வேறு எங்காவது ஹேக் செய்யப்பட்டு லாக்-இன் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
Security notifications ஆன் செய்திட, நீங்கள் WhatsApp Settings/ Account/ Security செல்ல வேண்டும். அதில், Show Security Notifications என்பதை ஆன் செய்ய வேண்டும்.
Log out an old phone ASAP if you lose it
உங்கள் சிம்முடன் செல்போனை தொலைத்துவிட்டால், அதனை மீட்டெடுப்பது கடினமாகும். அதிர்ஷ்டவசமாக, Android மற்றும் iOS போன்ற இயங்குதளங்கள் உங்கள் மொபைலை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்மட் செய்யக்கூடிய வசதியை தருகின்றன.
இருப்பினும், பழைய போன் வழியாக வாட்ஸ்அப்பை அணுகுவதைத் தடுக்க விரும்பினால், நீங்கள் விரைவாக டூப்ளிகேட் சிம் கார்டைப் பெற்று, புதிய போனில் போட வேண்டும். இந்த போனில் வாட்ஸ்அப் லாகின் செய்தால், தானாகவே பழைய போனில் லாக் அவுட் ஆகிவிடும்.
Use a different profile picture
புரோபைல் பிக்சர் மூலம், உங்களை பற்றிய பல விவரங்களைக் கண்டறிய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களது புரேபைல் படம் வாட்ஸ்அப் மட்டுமின்றி பேஸ்புக், லிங்கிடுஇன் போன்ற சமூக ஊடகங்களில் ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில், உங்கள் படத்தை பதிவிறக்கம் செய்து, அதனை கூகுள் போட்டோ சேர்ச்சில் பதிவிட்டால் போதும், உங்களது பேஸ்புக் கணக்கு சேர்சில் தோன்றும். அதனை உபயோகித்து பெயர் உள்ளிட்ட விவரங்களை கண்டறிய முடியும்.
இருப்பினும், இதைத் தடுப்பது நீங்கள் நினைப்பதை விட எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியது செவ் செய்யப்படாதா எண்களில் இருந்து உங்கள் புரோபைல் படத்தை மறைக்க வேண்டும். நீங்கள் WhatsApp Settings/ Account/ Privacy/ Profile photoக்கு சென்றும், அதில் ‘My contacts’ என்கிற ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும். மாறாக, நீங்கள் வேறு எந்த தளத்திலும் பயன்படுத்தாத தனிப்பட்ட புரோபைல் படத்தை வாட்ஸ்அப்பில் பயன்படுத்தலாம்.
Hide WhatsApp media from gallery
வாட்ஸ்அப்பில் வரும் படங்கள், GIFகள் மற்றும் வீடியோக்களை மறைப்பதன் மூலம் உங்கள் மொபைலின் கேலரியில் அவை செவ் செய்வதை தடுக்கலாம். இதைச் செய்ய WhatsApp Settings/ Chats/ Media Visibilityக்கு சென்று அதனை ஆப் செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு, வாட்ஸ்அப்பில் சம்பந்தப்பட்ட சாட்டில் மட்டுமே அந்த பைல்கள் இருக்கும். உங்கள் மொபைல் கேலரியில் அதனை பார்க்க முடியாது.
Log out of WhatsApp Web when not in use
வாட்ஸ்அப் வெப் அம்சம், தொழில் ரீதியான அம்சங்களுக்கு லேப்டாப்பில் யூஸ் செய்திட மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், உங்கள் கணிணியை வேறு யாராவது யூஸ் செய்தால், வாட்ஸ்அப் தகவல்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், வாட்ஸ்அப் மொபைல் போலவே, ஒவ்வொரு முறையும் பிரவுசர் ஓப்பன் செய்கையில், வாட்ஸ்அப் லாகின் ஆகும்.
இதைத் தடுக்க, அலுவலகம் அல்லது மற்ற எந்த கணினியில் வாட்ஸ்அப் லாக் இன் செய்தாலும் வேலை முடிந்ததும் உடனடியாக லாக் அவுட் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் வெப் பிசியில் செயல்படும் போது, உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் வெப் செயல்பாட்டில் இருப்பதை காண முடியும்.
Comments