தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா?

 தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா? ஏன் நடிக்க வந்தீர்கள்? என்றும் நாசர் சார் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை'' என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.


சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை. மேடையில் இருக்கும் அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே. பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்துள்ளேன். எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. 'காக்க காக்க' படம் வெளியான சமயம் அது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.
மேடையில் நாசர் சாரை பார்த்தவுடன் நான் பேச வந்ததையே மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். அவர் தான் எனக்கு வழிகாட்டி. என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு மாமனாராக நடித்திருந்தார். அப்போது நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாக தான் அறிமுகமானேன். அவர் என்னைப் பார்த்து "தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா? என்று வினவியதோடு, நான் ஏன் நடிக்க வந்தேன்” என்றும் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை.
நீங்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு குரு தேவை. அந்த வகையில் எனக்கு நிறைய குரு கிடைத்தார்கள். என் முதல் குரு என்று சொன்னால் அது நாசர் சார் தான். இன்று இந்த மேடையை அவருடனும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்குக் கற்பித்த அனைத்து சிறந்த பாடங்களுக்கும் நன்றி சார். இந்த இடத்தில் உங்களுக்கு நன்றி சொல்வதை ஒரு சிறந்த வாய்ப்பாக எண்ணுகிறேன்.
நன்றி: இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,