இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் கிட்னியில் கல் உருவாகும்! பொறுக்க முடியாத வலி தான்
இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் கிட்னியில் கல் உருவாகும்! பொறுக்க முடியாத வலி தான்
சிறுநீரகத்தில் கற்கள் உருவானால் ஏற்படும் வலியை தாங்கவே முடியாது. சில உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.
கீரை
கீரைகள் எல்லாமே ஆக்சலேட்டுகள் நிறைந்தவை. இந்த ஆக்சலேட்டுகள் அதிகரிக்கும் போது சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். சிறுநீரகக் கற்கள் பொதுவான வகைகள் கால்சியம் ஆக்சலேட் கற்கள் ஆகும். 100 கிராம் கீரையில் 970 மில்லிகிராம் ஆக்சலேட்டுகள் உள்ளன.
அதிகம் இனிப்பு - காரம்
இனிப்பு, புளிப்பு, காரம், மசாலா நிறைந்த உணவுகள், செயற்கை சுவையூட்டிகள், கோலா குளிர்பானங்கள்அனைத்துமே கேடு உடலுக்கு கேடுதரக்கூடியவை.. அதில் முக்கியமானது சிறுநீரககற்கள். இது உடல் பருமனையும் சத்தமில்லாமல் சிறுநீரகப்பையில் கற்களையும் உரு வாக்கிவிடுகிறது.
உப்பு
உப்பில் உள்ள மூலப்பொருளான சோடியத்தை அதிகம் சாப்பிட்டால், அது உங்கள் சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன், கூடுதல் ஆக்சலேட் சிறுநீரகங்களில் கால்சியத்துடன் ஒட்டிக்கொள்ளும். அது சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கலாம்.
பன்றி இறைச்சி
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, முட்டை, பாலாடைக்கட்டி மற்றும் மீன் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அவை சிறுநீரகக் கற்களின் பெரும்பாலான வகைகளின் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
போதிய தண்ணீர் அருந்தாமை
தினமும் உடலுக்கு தேவையான அளவு தாகம் இல்லையென்றாலும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதை அறிவோம். காரணம் சிறுநீரை வெளியேற்றும் போது கழிவுகள் தாராளமாக பிரித்தெடுக்க போதிய தண்ணீர் தேவைப் படுகிறது. அப்போது தண்ணீரின் அளவு குறையும் போது இயல்பாக சிறுநீரகத்தில் இருக்கும் உப்பு முழுமையாக வெளியேறாமல் மண் துகள்களாக அங்கேயே படிந்துவிடுகிறது. உடலில் தண்ணீர் இழப்பு ஏற்படும் போது கற்கள் உருவாவதும் இயல்பாகிறது.
Comments