வில்லன் அவன் வல்லவன்

 ரஜினி கால்ஷீட்டே கிடைத்தாலும் நல்ல வில்லன் கிடைக்கவில்லை என்றால் சூட்டிங் போகாதீர்கள்.



தளபதி படத்திற்கு நல்ல வில்லன் கிடைக்கும் வரை காத்திருந்தார்கள் என்று, அதில் உதவி இயக்குநராக பணியாற்றிய முரளி அப்பாஸ் ஒரு தொலைக்காட்சி உரையாடலில் குறிப்பிட்டார். அது மிக மிக முக்கியமான கருத்து.


சமீபத்தில் வெளியான ரஜினி, அஜித், விஜய் படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றாலும், அவர்களுடைய இரசிகர்களுக்கே 100 சதவிகிதம் திருப்தி தராத படங்களாக அமைந்துவிட்டன. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது, படத்தில் வில்லன்களே இல்லை. இருந்தாலும் இந்த உச்ச நட்சத்திரங்களின் ”மாஸ்” இமேஜிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் ஹீரோக்கள் நடனம், ஸ்டண்ட், பஞ்ச் வசனம் என மாஸ்காட்டினாலும் அது எடுபடமாட்டேன்கிறது. 


எம்.ஜி.ஆருக்கு ஒரு நம்பியார், ரஜினிக்கு ஒரு ரகுவரன் இருந்தது போல இப்போது ”மிரட்டலாக” ஈடுகொடுத்து நடிக்க யார் இருக்கிறார்கள். நம்பியார், ரகுவரனை தங்கள் ஹீரோவுக்கு இணையாக இரசித்தார்கள். அதற்குரிய தகுதியும், ஈர்ப்பும் அவர்களிடமும் இருந்தது.



எனவே அடுத்து ரஜினி-அஜித்-விஜய் படத்தை இயக்குபவர்கள், அட்டகாசமான வில்லனை உருவாக்காமல் படப்பிடிப்புக்கே போகாதீர்கள். 


சமீபத்தில் வெற்றி பெற்ற RRR படம் கூட வணிக ரீதியாக பெரும் வெற்றி. ஆனால் பாகுபலி அளவிற்கு கொண்டாடப்படவில்லை. ஏனென்றால் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரமே இல்லை. இருந்த முகங்களும் எடுபடவில்லை.


எனவே சூப்பர் ஹீரோக்கள் எடுபட வேண்டுமென்றால், அவர்களிடமே கெத்து காட்டும் வில்லன்கள் முக்கியம்.


So go for villains not just heroes.


ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி