WhatsApp-ன் புதிய அப்டேட்கள் என்னென்ன
இனி நம்பரை சேவ் செய்யாமலே மெசேஜ் அனுப்பலாம்... WhatsApp-ன் புதிய அப்டேட்கள் என்னென்ன
மெட்டா நிறுவனத்தின் குறுஞ்செய்தி பகிரும் செயலிகளில் ஒன்று WhatsApp. உலகெங்கும் கோடிக்கணக்கில் பயனாளர்களைக் கொண்டிருக்கும் இந்தச் செயலி ஏராளமான சேவைகளை வழங்கி வந்தாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய சேவை ஒன்றை இப்போது அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.
பொதுவாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய வேண்டும் என்றால் பயனருடைய எண்ணை போனில் பதிவு செய்ய வேண்டும். பெரிதாக உரையாட அவசியம் இல்லாதவர்களுக்கு செய்தி அனுப்பவும் அவர்களின் எண்ணைச் சேமிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. எண்ணைச் சேமித்து விட்டால் வாட்ஸ்அப் ப்ரொபைல் பிக்சர், ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றை அந்த நபர்களுக்குக் காட்டும். இதனால் பயனர்களின் பிரைவசி பாதிக்கப்படும் அபாயம் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஒருவரின் எண்ணை சேமிக்காமலேயே அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.
வாட்ஸ்அப்பில் புதிதாக நீங்கள் பெறுகிற எண்ணை கிளிக் செய்தால் போன் செய்யும் ஆப்சன் காட்டும். அதனைச் சேமிக்கவும் முடியும். இப்பொது அவற்றோடு நேரடியாக அந்த நபருக்கு செய்தி அனுப்பும் Direct Message ஆப்சனும் இணைக்கப்பட இருக்கிறது. தற்போது இந்த வசதி, சோதனை நிலையில் இருப்பதால் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments