முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டம்: 2022 பயன் பெறுவது எப்படி?

 முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டம்: 2022

பயன் பெறுவது எப்படி?


தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. 
அதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ரூபாயாக இருந்தது ஆனால் தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்தது குடும்பஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ரூ.5லட்சம் வரை தனியார் மற்றும்அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். அதனால் இதுவரை இந்த காப்பீட்டை பெறாதவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெருங்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? தேவையான சான்றிதழ்கள்: 1) ரூ.1,20,000/- க்கு குறைவாக உள்ள வருமான சான்று 2) குடும்ப அட்டை நகல் 3) குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் அட்டைஇதனை எடுத்துக் கொண்டு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். அங்கு சான்றிதழ்களை சரிபார்த்து, குடும்ப தலைவரின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்இதைத் தொடர்ந்து 22இலக்கஎண் கொடுப்பார்கள். 10 நாட்கள் கழித்து கலெக்டர்ஆபீசில் இருந்து உங்களுக்கு கால் செய்து அழைத்து மருத்துவ காப்பீட்டு அட்டை தருவார்கள் காப்பீட்டு அட்டை வருவதற்கு முன்னதாக, மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், 22 இலக்க எண்ணைக் கொண்டு, சிகிச்சை பெறலாம். குடும்ப தலைவர் காப்பீட்டு அடை பெற்றால், அவருடைய சட்டப்பூர்வமான மனைவி/கணவர்,குழந்தைகள், பெற்றோர்கள் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். ஆனால், அவர்கள் பெயர்கள், குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும்மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து 6 மாதங்களுக்கு மேல் தமிழ்நாட்டில் தங்கி இருப்பவர்களும் பயன்பெறலாம். அதற்கு தமிழ்நாடு தொழில்துறையின் சான்று பெற்று, சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களும் பயன்பெறலாம். அவர்கள் முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்றை, இணைத்து, வருமான சான்று இல்லாமலேயே சேரலாம். இத்திட்டத்தை அரசாங்கம் யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம்மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.விண்ணப்பித்து 3 நாட்களில் உங்களது விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் மற்றும் அட்டையின் நகலை ஆன்லைனில் எப்படி பெறுவது என்றும் சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் cmchistn.com/index.php மேலே உள்ள இணையதளத்தில் உள்ளது அது எப்படி என்று பார்ப்போம்
https://twitter.com/FilmFoodTravel/status/1527859762439655424?s=20&t=UzoQfCdyMjuBWs55tL02ZQ


மேலும், மருத்துவ காப்பீட்டு அட்டை பெறவில்லை என்றாலும் சிகிச்சை மற்றும் சேர்க்கை தாமதப்படுத்தப்படுவதில்லை. குடும்ப அட்டை விபரங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்குள், காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து, 22 இலக்க எண்ணைப் பெற வேண்டும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,