6 வருடங்களுக்கு பிறகு.. பிரதமர் தலைமையில். மாநில முதலமைச்சர்கள் மாநாடு

 6 வருடங்களுக்கு பிறகு.. பிரதமர் தலைமையில் இன்று நடக்கிறது.. மாநில முதலமைச்சர்கள் மாநாடு.. டெல்லியில்


உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாட்டை, பிரதமர் மோடி 30-4-2022 அன்று டெல்லியில் தொடங்கி வைத்தார்
டெல்லியில் 29/4/2022 அன்று  அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 39-வது தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமை தாங்கினார்.

பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு பிறகு மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கலந்து கொள்ளும் கூட்டு மாநாட்டை பிரதமர் மோடி துவங்கி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.. நீதித்துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது... இந்த மாநாட்டில் கடந்த 2016ல் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் மற்றும் நீதி வழங்கல் முறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
https://tamil.oneindia.com/news

மேலும், இந்த மாநாட்டில் மாவட்ட நீதிமன்றங்களுக்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மாவட்ட நீதிமன்றங்களின் தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்கான நிரந்தர கணினி அதிகாரிகள், அனைத்து பங்குதாரர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை அனுப்புதல், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன
25 உயர்நீதிமன்றங்களின் பராமரிப்பு, திட்டமிடல் போன்ற பணிகளை மேற்கொள்ள தலைமை நீதிபதி தலைமையிலான தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை அமைப்பது குறித்தெல்லாம் இன்றைய மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. காரணம், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி இது தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
6 ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்வி ரமணா, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜிஜி ஆகியோர் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகின்றனர்... மாநில முதல்வர்களின் மாநாட்டில், முதலமைச்சர்கள் பங்கேற்காத நிலையில், அரசின் சார்பில் அமைச்சசர்கள் கலந்து கொள்ளதாக கூறப்பட்டுள்ளது.. எனினும், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாடு 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் எதிர்பார்ப்பு கூடி வருகிறது.


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி