ஜெனரல் சியாவுர் ரகுமான்
வரலாற்றில் இன்று மே 30 1981 –
வங்காள தேசத்தில் நடை பெற்ற இராணுவப் புரட்சியின் போது அதன் அரசுத்தலைவர் ஜெனரல் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1977ல் வங்காளதேசத்தில் குடியரசு தலைவராக இருந்த நீதிபதி சாயெம் பதவி விலகியதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் சியாவுர் ரகுமான் ஜனாதிபதியாக பதவியேற்றார். இவர் வங்காளதேசத்தில் பலகட்சி அரசியலை மீண்டும் கொண்டுவந்ததோடு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்தினார். மேலும் வங்காளதேச தேசியக் கட்சி எனும் கட்சியையும் உருவாக்கினார். 1981ல் ராணுவத் தலைவர் ஹுசைன் மொஹம்மத் எர்ஷாத் தலைமையிலான ராணுவம் புரட்சி செய்து சியாவுர் ரஹ்மானை சுட்டுக் கொன்றனர் சியாவுர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து. வங்காளதேசத்தின் அடுத்த ஆட்சியாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஹொசைன் மொகமத் எர்சாத் பதவியேற்றார். ஜியாவுர் ரஹ்மானின் மனைவிதான் வங்காளதேச தேசியக் கட்சி யின் தலைவர் பேகம் காலிதா சியா ஆவார்
Comments