உலக தம்பதியர் தினம்

 உலக தம்பதியர் தினம்


ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ந் தேதி உலகம் முழுவதும் ‘சர்வதேச தம்பதியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், இரு மனங்கள் ஒன்றிணைந்து செய்த காதல் திருமணமாக இருந்தாலும், கைப்பிடித்த நாள் முதல் ஆயுளின் இறுதி வரை கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும். இதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ந் தேதி உலகம் முழுவதும் 'சர்வதேச தம்பதியர் தினம்' கொண்டாடப்படுகிறது. தம்பதிகளின் ஒற்றுமைக்கு புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. அவற்றை அடித்தளமாகக் கொண்டே திருமண பந்தம் எனும் கோட்டை எழுப்பப்படுகிறது.மாறிவரும் வாழ்க்கை முறையால் பல தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைந்து வருகிறது. அதன் வெளிப்பாடாக உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதில் மூன்றாம் நபர்களின் தலையீடு, வாக்குவாதங்கள் போன்றவை அதிகரிக்கும்போது, ஒற்றுமையாலும், அன்பாலும் கட்டப்பட்டக் கோட்டை தகர்ந்து விடும். எனவே எந்த நிலையிலும் கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், மனம் விட்டு பேசி, புரிந்துணர்வோடு வாழ்வதே திருமண பந்தம் நிலைப்பதற்கான நல்வழியாகும். ஓம் நமசிவாய
🙏
Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்