இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முதல் கூட்டம் நடைபெற்ற தினம்

 மே 13,

வரலாற்றில் இன்று.




இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முதல் கூட்டம் நடைபெற்ற தினம் இன்று (1952). அந்த முதலாவது கூட்டத்துக்கு  துணை குடியரசு தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி உரையாற்றினார் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தலைவராக என்.கோபால்சாமி அய்யங்கார் இருந்தார் அப்போது அதன் பெயர் மாநிலங்களின் அவை  (Council of States) என்று மட்டுமே இருந்தது 1954  ஆம் ஆண்டு அதன் பெயர் ராஜ்ய சபை என்று மாற்றப்பட்டது

🔰நாடாளுமன்றத்தின்ஒரு அங்கமாக திகழ்வது  மாநிலங்களவை (ராஜ்ய சபா): இந்த அவையின் அதிகாரங்களும் வரம்புகளை இந்திய அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன

🔰மாநிலங்களவை நிரந்தரமானது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 250

மறைமுக தேர்தல் மூலம் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள்.

🔰ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு வருடங்கள், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழப்பர்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,