ஜெயகாந்தன் சினிமாவுக்குள் வந்துபோன ஒரு வசீகரம் மற்றும் நீண்டு தேய்ந்த நிழல்

 சமரசம் செய்துகொள்ளாத அவரது ‘உன்னைப் போல் ஒருவன்’ தேசிய விருது பெற்றது. இயக்குநர் பீம்சிங் கரங்களில் ஒப்படைக்கப்பட்டதால் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ பொதுமக்கள் படமானது. பிற படங்கள் பெருவெற்றி பெறவில்லையென்றாலும் அதுகுறித்து அவர் கவலையுறவில்லை.


சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது என்றும், துணியைக் கிழிக்காமல் சட்டை தைக்க முடியாது; எழுத்து ஊடகம் வேறு - காட்சி ஊடகம் வேறு என்றும் விளங்கிக்கொள்வதற்கு ஜெயகாந்தன் கொடுத்த விலை அதிகம். அவரது ‘யாருக்காக அழுதான்’ கதை உரிமையைத் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணிதான் முதலில் பெற்றிருந்தார். சிவாஜி - சாவித்திரி - ரங்காராவ் - பாலையா போன்ற புகழ்மிக்க நட்சத்திரங்கள் நடிக்க, கலைமிக்க இயக்குநர் ஸ்ரீதர் இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது.
திரைக்கதையில் உச்சக் காட்சியை உணர்ச்சி கரமாக மாற்றியிருப்பதாக ஜெயகாந்தனுக்குச் சொன்னார் ஸ்ரீதர். “ஒரு வாழைத்தோப்பின் நடுவே மரச் சிலுவையின் முன்னே தொழுது விழுந்து உயிர்விடுகிறான் திருட்டு முழி ஜோசப்” என்று மாற்றியிருக்கிறேன் என்றார் இயக்குநர். தன் உணர்ச்சிகளையெல்லாம் உள்ளே புதைத்துக்கொண்டு ‘சிறு யோசனை’ என்றார் ஜெயகாந்தன். ‘சொல்லுங்கள்’ என்றார் ஸ்ரீதர். “படத்தின் தலைப்பை யும் யாருக்காகச் செத்தான் என்று மாற்றி விடுங்களேன்”. அவ்வளவுதான் ஸ்ரீதர் இயக்குவதாக இருந்தபடம் செத்துவிட்டது.
ஜெயகாந்தன் எழுதுகிறார்: “என்னை அவர் கிறுக்கன் என்று நினைத்திருக்கலாம். சில வட்டாரங்களில் என்னை அப்படித்தான் அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியும். நானும் அப்படித்தான் இருந்தேன்”.
அது ஞானக்கிறுக்கு என்றோ, அதில் கிறுக்கைக் கழித்து ஞானத்தை மட்டும் கலை செய்ய வேண்டுமென்றோ, நிமிடத்தைப் பொன்னாக்கும் சினிமாவுக்கு நினைத்துப்பார்க்க நேரமிருந்திருக்காது. ஜெயகாந்தன்
சினிமாவுக்குள் வந்துபோன ஒரு வசீகரம் மற்றும் நீண்டு தேய்ந்த நிழல்.
- வைரமுத்து
நன்றி: இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,