இன்று மே 30, 1981 மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் நினைவு நாள் பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் தென்னிந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். இவரை நேயர்கள், 'கலியுக நந்திகேசுவரர்' என்று செல்லப் பெயரால் அழைத்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பழைய கல்பாத்தி கிராமத்தில் இவர் பிறந்தார். தனது 7 ஆவது வயதில், மிருதங்க இசைப் பயிற்சியை சாத்தபுரம் சுப்பய்யரிடம் பெற ஆரம்பித்தார்; தனது தந்தையின் நண்பர் விசுவநாத ஐயரிடமும் மிருதங்கம் கற்றார். 10 வயது நிரம்பியபோது தன் அப்பாவுக்கும், மற்ற கதாகாலக்சேபக் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். தனது 15 ஆவது வயதில் செம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பிறகு இவர் புகழடையத் தொடங்கினார்.
இவர், புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்: சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. 1971ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்றார்
No comments:
Post a Comment