பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா

 மே 20,


தென்னிந்திய திரைப்படத்துறையின் புகழ்பெற்ற

ஒளிப்பதிவாளர், இயக்குனர்

பாலு மகேந்திரா பிறந்த தினம் இன்று.

1939 மே 20ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.

லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார்.

பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப்பதக்கம் பெற்றார். அதன் பின்னர் திரைப்படத்துறையில் தீவிரமாக ஈடுபடலானார்

தமிழ் சினிமாவை அருமையான கலை அனுபவமாகவும், அழகனுபவமாகவும் மாற்றியவர்களில் ஒருவர் பாலுமகேந்திரா. இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகர் என்று பல துறைகளில் இயங்கியவர். இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர்களில் இவர் பெயரும் இடம்பெறும். 1970களின் மத்தியில் இந்தியாவெங்கும் உருவான ‘புதிய அலை’ சினிமா இயக்கத்தின் முகங்களில் ஒருவர் பாலுமகேந்திரா.

தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்பட உலகில், பின்னர் சாதனை படைத்த முக்கியமான இயக்குநர்களின் முதல் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திரா பணிபுரிந்துள்ளார். தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களாகக் கருதப்படும் மகேந்திரன், மணிரத்னம் ஆகியோரின் முதல் பட ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராதான்.


இயக்கிய திரைப்படங்கள்

 1. கோகிலா
 2. அழியாத கோலங்கள்
 3. மூடுபனி
 4. மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
 5. ஓலங்கள் (மலையாளம்)
 6. நீரக்ஷ்னா (தெலுங்கு)
 7. சத்மா (ஹிந்தி)
 8. ஊமை குயில்
 9. மூன்றாம் பிறை
 10. நீங்கள் கேட்டவை
 11. உன் கண்ணில் நீர் வழிந்தால்
 12. யாத்ரா
 13. ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
 14. ரெட்டை வால் குருவி
 15. வீடு
 16. சந்தியாராகம்
 17. வண்ண வண்ண பூக்கள்
 18. பூந்தேன் அருவி சுவன்னு
 19. சக்ர வியூகம்
 20. மறுபடியும்
 21. சதி லீலாவதி
 22. அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
 23. ராமன் அப்துல்லா
 24. என் இனிய பொன் நிலாவே
 25. ஜூலி கணபதி
 26. அது ஒரு கனாக்காலம்
 27. தலைமுறைகள்
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி