இரவு நேரத்தில் மிளிரும் கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகள்.

 










இரவு நேரத்தில் மிளிரும் கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகள்


அழகிய படங்கள்

ஆனைமலை வனத்தில் மின்மினி பூச்சிகள் நடத்திய ஒத்திசைவு ஒளி நடனத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தேசிய விலங்கான புலி மற்றும் சிறுத்தை, யானை. காட்டெருமை. மான் மற்றும் அரிய வகையான மிருகங்களும் அரிய வகை யான பூச்சிகளும், பறவைகளும் இந்த வனப் பகுதியில் வாழ்ந்து வருகின்றன

இந்த ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோடிக்கணக்கான மின் மினிப்பூச்சிகள் ஒரே நேரத்தில் ஒத்திசைவு ஒளி நடனத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகள் இரவு நேரத்தில் ஒளியை எதிர்த்துத் இருப்பது வன ஆர்வலர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இதே போன்று மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவு ஒளி நடனம் கடந்த 1999 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் ஆனைமலை காடுகளில் நடைபெற்றுள்ளது.  ஆனைமலை வனப்பகுதியின் அடர் வனத்தில் நடந்த கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகள் நடத்திய இந்த ஒத்திசைவு ஒளி நடனத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

ஆனைமலை வனப்பகுதியில் அப்ஸ்கோண்டிடா (Abscondita) என்ற மின்மினிப் பூச்சி இனம் அதிகளவில்  இருப்பதும் தெரியவந்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட மின்மினிப்பூச்சி வகைகள் உலகெங்கும்  உள்ள நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர் வனத்தில் அப்ஸ்கோண்டிடா மின்மினி பூச்சி கூட்டம் இருப்பது வனத்தின் சூழல் சிறப்பாக இருப்பதற்கு உதாரணமாக வனத்துறையினர் கருதுகின்றனர்.
அவதார் பட காட்சிகளை போல  ஆனைமலை புலிகள் காப்பகம் இரவு நேரத்தில் ஒளிர்வது வனத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
செய்தியாளர் : சக்திவேல் மலையாண்டி
https://tamil.news18.com/

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி