தா. பேகம் அவர்கள் எழுதிய சந்தனக் கூப்பு புதினம்

 

எழுத்தாளர். பிரபா  மேடத்தால்  தொடங்கப் பெற்றது சங்கப் பலகை. இதன் ஆண்டு விழா   கோயமுத்தூரில் 22.05.2022 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. சங்கப் பலகையின்  தூண்களான பிரபா மேம், அவர்களது தாயார் ,திரு.சுரேஷ்சந்த், எழுத்தாளர். கணேஷ்பாலா, எழுத்தாளர். ரிஷபன், எழுத்தாளர். சப்தரிஷி லா. சா. ராமாமிருதம் ஆகியோரின்  ஆசிகளோடு  பாக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவுநர் உமா அபர்ணா அவர்கள் நூல் வெளியீட்டு விழாவைஅன்று நடத்தினார். 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆன்மிக மர்ம எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் க்ரைம் ஸ்டோரி மன்னன் திரு. ராஜேஷ் குமார் அவர்களும் வந்திருந்து ,நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினர்.  இவ் விழாவில் முனைவர் தா.பேகம் அவர்களுடைய 'சந்தனக்கூப்பு' எனும் புதினமும்; முனைவர் அ.திலகவதி அவர்களுடைய 'யாதுமாகி' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 


தா. பேகம் அவர்கள் எழுதிய சந்தனக் கூப்பு புதினம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் வாழ்கின்ற மலைவாழ் மக்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பெற்ற புதினம் ஆகும்

. இந்நாவலில் ஆளுமைகளின் விவரிப்புகள் அர்த்தமுள்ள தாக்குகின்றன. அதேவேளையில் வாழ்க்கையில்  கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை யதார்த்தத்தோடு எடுத்துச் சொல்கிறது. மானுடத்தின் விளிம்பில் உள்ள மலைவாழ் மக்களின் நான்கு பரம்பரைகளின் வாழ்வியலை ஒன்றும் குறைவுபடாமல் வெளிக்காட்டுவதோடு நாட்டுப்புறவியலையும் மானுடவியலையும் நிலைநிறுத்த முயல்கிறது இந்நாவல். மலையாளி என்பவர் யார்?  அவரது வாழ்வியல் சடங்கு முறைகளும் நாட்டுப்புற மருத்துவ முறைகளும் இணை  நோக்கில் வெளிப்படுத்தி இருப்பது கூடுதல் கவனம் கொள்ள வைக்கிறது. இயற்கையோடு பிணைந்திருக்கிற மலையாளிகளின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஒருங்கே காட்டும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது. அதேபோல் மலைவாழ் மக்க களிடையே தற்போது தற்சார்பு நிலை ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட நாவல் தயங்கவில்லை. கதைக்குள் கதை என எடுத்துரைக்கும் பாங்கு கைதேர்ந்த நாவலாசிரியராகவே எடுத்துக்காட்டுகிறது.    

    கொங்கு வட்டார எழுத்தாளர் ஈரம் கசிந்த நிலம் எனும் புதினத்தின் காக பாஷா பரிஷத் விருது பெற்ற சி ஆர் ரவீந்திரன் அவர்கள் சந்தனக்கூடு நாவலின் தன்மையை கீழ்வருமாறு குறிப்பிடுகிறார் தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய மாற்றம் சந்தனக்கூடு உலக அளவில் நிகழ்ந்துவரும் பொருள் உற்பத்தி மற்றும் வணிகம் போன்ற அடிப்படையான வாழ்க்கை முறைகளில் நிகழ்ந்துவரும் என்ற இன்றைய சூழலில் தொழில் வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் மிகப்பெரிய அளவில் உலகளாவிய அளவில் அதிவேகமான தாக்கங்களை நிகழ்த்தி வருகின்றது

 மனிதகுலம் இதுவரை நிகழ்த்தி வந்த வாழ்க்கை முறைகள் தகர்க்கப்பட்டு மனித உறவுகள் சிதைக்கப்பட்டு அமைதியை இழந்து வருகிறது இதன் வெளிப்பாடாக பலதரப்பட்ட எதிர்வினைகள் வெளிப்படுவதை நாள்தோறும் கண்டு வருகிறோம் இதுவரை அறிவியலும் தொழில்நுட்பமும் நகரங்களிலும் அவற்றைச் சார்ந்த பகுதிகளில் மட்டுமே மாற்றங்களை நிகழ்த்தி வந்தன இப்போது அவை கிராமப்புறங்களை குறிவைத்து அவற்றை நோக்கி நகர்கின்றன விவசாயத்தில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் நிகழ்கின்றன மண்வளமும் நீர்வளமும் மனித வளமும் நிறைந்து இயல்பிலேயே தன்னிறைவு பெற்று அமைதியாகவும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத வகையில் மாறுதல்கள் நிகழ்கின்றன

 இயற்கை வளம் நிறைந்த தன்னிறைவு பெற்ற இந்தியா மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது இனம் மதம் மொழி பொருளாதாரம் கல்வி கலாச்சாரம் பண்புகள் மாறுபட்ட நிலையிலும் வேற்றுமையால் ஒற்றுமை காட்டிவரும் இந்தியா படிப்படியாக அமைதியை இழந்து வருகிறது அதை இனம் காட்டும் வகையில் உலகளாவிய அளவில் கருத்துகள் வெளிப்பட்டு பரவலாகி வருகின்றன இயற்கை வளங்கள் மீட்டெடுக்க முடியாத வகையில் சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன அதன் விளைவாக சுற்றுப்புறச் சூழல்கள் சூழ்நிலைகள் மிகப்பெரிய அளவுக்கு மாறுதல்களுக்கு உள்ளாகி வருகின்றன அதை இனம் காட்டும் விதத்தில் தமிழ் இலக்கியச் சூழலிலும் கலை இலக்கியப் படைப்புகளின் உருவாக்கம் வெளில் மாற்றங்கள் நிகழ்கின்றன அதை அடையாளப்படுத்தும் வகையில் இயல்பாக நிகழும் வாழ்க்கைச் சூழலை நாவல் வடிவத்தின் வாயிலாக சந்தனக்கூடு என்ற தனது படைப்பில் தாகம் பதிவு செய்திருக்கிறார் 

நடுத்தரவர்க்க மக்களுக்காக அதே வர்க்கத்தைச் சேர்ந்த இலக்கிய படைப்பாளிகள் வடிவமைக்கப்பட்டு வரும் தமிழ் இலக்கிய சூழலில் மலையோர மக்களின் வாழ்வியலை பின்புலமாகக் கொண்ட இந்த நாவலில் காராளர் என்ற மக்கள் சித்தரிக்கப்படுகிறார்கள் அறியாமை ஏழ்மை வறுமை போன்ற பின்தங்கிய சூழலில் உழவு மற்றும் கால்நடை மேய்த்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுவரும் மக்களின் வாழ்க்கை இந்த நாவலில் அகலமாகவும் இயல்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது

 இதிகாசங்களிலும் புராணங்களிலும் கர்ண பரம்பரை கதைகளில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு காட்டப்படும் எளிய மனிதர்கள் இந்த நாவலில் உன்ன தான் உன்னதமான குணங்களும் செயல்படும் ஒப்பிடப்படும் அளவுக்கு இயல்பாக இருக்கிறார்கள் நாவலில் வரும் மனிதர்களின் இயல்பான அன்பு கோபம் தாபம் பரிவு போன்ற உணர்வுகள் மனதை நெகிழச் செய்கின்றன அலங்காரம் இல்லாத இயல்பான எழுத்து நடையும் பேச்சு நடையும் நாட்டுப்புற பாடல்களும் உள்ளூர் வெளிப்பாடுகளாக உள்ளன வியக்கத் தகுந்த முறையில் மகப்பேறு காலத்தில் குழந்தையை பெற்றெடுக்கும் அனுபவங்களை துல்லியமாகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் இந்த நாவலில் சித்தரித்திருக்கிறார் 

கணவனால் கைவிடப்பட்ட கணவனை இழந்த பெண்கள் தங்களுடைய அயராத முயற்சியாலும் உழைப்பாலும் தனது குழந்தைகளை வளர்ப்பு அவர்களுக்கு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்கும் தாய்மார்களை ஓர் உண்மையான பெண்ணை சித்தரிப்பதில் வாயிலாக இன்றைய தலைமுறையின் உன்னதமான தன்மையை இனம் காட்டுகிறார் அதில் நாவலின் தனிச்சிறப்பை உணரும் வகையில் ஒரு கருத்தை தெரிவிக்கிறார் சில நாட்களுக்குப் பிறகு சந்தனக்கூடு மாடு பிடித்துச் சென்றார் ராதா எப்போதும் திருமுனைப்பாடி அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்தாள் உயிரோடு இருக்கும் வரை எறும்புக்கும் தீங்கு நினைக்காத அவளே வாழும் காலம் முழுவதும் பண்பாடு மாறாமல் வாழ்ந்தவர்களே உன்னை நினைக்கும் போதெல்லாம் மனம் சந்தனமாய் மணக்கிறது தாயே நீ எங்கு சென்றாயோ இந்த சந்திப்பில் இருந்த ஏராளமான சந்தன மரங்கள் அழிந்து போய்விட்டன எனக்கு தெரிந்த ஒரே ஒரு சந்தன மரம் மட்டும் இங்கே இருந்தது இப்போது அந்த சந்தன மரமும் காணவில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்துவிட்டேன் இங்கே கூப்டு மட்டும்தான் இருக்கிறது சந்தன மரங்கள் கண்களில் படவே இல்லை

 இயற்கையோடு இயைந்து வாழும் முறைக்கு பழகிப்போன தலைமுறையினர் ஒரு பக்கமும் அவற்றிலிருந்து வெளியேறத் துடிக்கும் தலைமுறையினர் மறுபக்கமும் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் தங்களுக்கான செறிவான வாழ்க்கை சூழலை கட்டமைக்க தவிக்கின்றனர் என்ற தனது புரிதலை வெளிப்படுத்தும் வேகம் தகவலை அருமையாக வடிவமைத்து இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்

 மேலும் இந்த அருமையான நூலை மிகச் சிறப்பாக வடிவமைத்து தமிழ் சமூகத்திற்கு இந்த நாவலை அடையாளப்படுத்தி வெளியிட்டபாக்கிடெர்ம்டேல்ஸ்  டாக்கிங் டாம் டைல்ஸ் நிறுவினர் உமா அபர்ணா மற்றும் லக்ஷ்மி பிரியா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

 இதுபோன்ற மண்வாசனை நிரம்பிய பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கி எழுதப்படுகின்ற புதினங்களை நாவல்களை வெளியிட்டு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தமிழ் தொண்டு செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

 தா.பேகம்  அவர்களை மனதார வாழ்த்துவதோடு மட்டுமின்றி மொத்தத்தில் சந்தனக்கூப்பு நாவல் மணக்கிறது. 

அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,