சவுதரி சரண் சிங் நினைவு நாள்

 




இன்று சவுதரி சரண் சிங் நினைவு நாள் ( Caudharī Caraṇ மான்சிங்; 23 டிசம்பர் 1902–29 மே 1987). இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார். பதவியில் இருந்தபோதே மாரடைப்பினால் அகால மரணமுற்றார் குறுகிய காலம் மட்டுமே பிரதமாராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.(இவர் தன்னுடைய பதவி காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை) என்றாலும் இவர் நினைவில் கொள்ளவேண்டிய அளவு ஒரு இந்திய விடுதலைப்போராட்ட வீரர்

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சரண் சிங் தொடர்ந்து மகாத்மா காந்தியின் தலைமையில் ஈடுபட்டு பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.1930 இல் அவர் உப்பு சட்டங்களை மீறியதன் மூலம் 6 மாதங்கள் சிறையில் அனுப்பப்பட்டார். அவர் தனிநபர் சத்யாகிரகம் செய்ததன் பொருட்டு நவம்பர் 1940 ல் ஒரு வருடம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் மாதம் அவர் DIR கீழ் பிரிட்டிஷ் சட்டத்தின் மூலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜவகர்லால் நேருவின் சோவியத் பாணி பொருளாதார சீர்திருத்தத்தை சரண் சிங் எதிர்த்தார். 

. 1979 ஆண்டில் முன்னாள் லோக் தள் கட்சியானது, சரண்சிங்கின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது;அவர் 64 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்திரா காந்தி ஆதரவு காங்கிரஸ் கட்சி சரண்சிங் அரசாங்கத்தை அமைக்க வாக்குறுதியளித்த பின்னர் பிரதம மந்திரி ஆனார். என்றாலும் மிக குறுகிய காலத்தில் காங்கிரஸ் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டு சரண்சிங் ஆட்சியை கவிழ்த்தது



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,