சிறுகதைத் தொகுப்பு #உறவுச்சங்கிலி வெளியீடு

 

 எழுத்தாளர். பிரபா  மேடத்தால்  தொடங்கப் பெற்றது சங்கப் பலகை. இதன் ஆண்டு விழா   கோயமுத்தூரில் சிறப்பாக 22,05,2022 அன்று நடைப்பெற்றது. சங்கப் பலகையின்  தூண்களான பிரபா மேம், அவர்களது தாயார் ,திரு.சுரேஷ்சந்த், எழுத்தாளர். கணேஷ்பாலா, எழுத்தாளர். ரிஷபன், எழுத்தாளர். சப்தரிஷி லா. சா. ராமாமிருதம் ஆகியோரின்  ஆசிகளோடு கோவையில் உள்ள பசு வண்ணன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பாக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவுநர் உமா அபர்ணா அவர்கள் நூல் வெளியீட்டு விழாவை நடத்தினார்


 இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆன்மிக மர்ம எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் க்ரைம் ஸ்டோரி மன்னன் திரு. ராஜேஷ் குமார் அவர்களும் வந்திருந்து ,நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினர்


சங்கப் பலகை விழாவில் எழுத்துலக ஜாம்பவான்கள் திரு. ராஜேஷ் குமார் Rajesh Kumar  திரு. இந்திரா சௌந்தரராஜன்  கைகளால் சான்றோர் பெருமக்கள் கூடிய சபையில் சேலம்சுபா அவர்களின் சிறுகதைத் தொகுப்பு #உறவுச்சங்கிலி வெளியிடப்பட்டது





 சேலம்சுபா
       சேலத்தில்  பிறந்த இவர் தன் ஊரின் பெருமையோடு சேலம்சுபா எனும் புனைபெயரில் எழுத்துக்களத்தில் பல வருடங்களாக பயணம்  செய்து கொண்டிருக்கிறார்.15வயதில் இதயம் பேசுகிறது இதழில் இவரின் முதல் கவிதை பரிசுகளுடன் பிரசுரம்  ஆகியது .தொடர்ந்து பல தடைக்கற்களைத் தாண்டி நெஞ்சில் நிறைந்த எழுத்து வேட்கையுடன் சுயம்புவாக வளர்ந்த எழுத்தாளர்  இவர்.பல பத்திரிக்கைகளில் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன .பிரபல நாளிதழில் தொடர்ந்து வெளிவந்த வாழ்வியல் கட்டுரைகள் இவரை  பற்றிவெளியுலகத்திற்கு அறியவைத்தது . கதை கவிதை கட்டுரைகள் என அனைத்திலும் பேனா பதிந்தாலும் பத்திரிக்கையாளர்  அவதாரத்தில் முன்னணி இதழ்களில் வெளிவரும் சாதனைப்பெண்கள் குறித்த நேர்காணல்கள்  இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. எழுத்தின்  மீதான ஆர்வம் வளர்ந்து பத்திரிக்கை உலகில் தனிமுகவரியுடன்  சாதிக்க வைத்தது. எழுத்துடன் சமையலும் புகைப்படமெடுப்பதும் இருசக்கரவாகனத்தில் பயணிப்பதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளும் தன்னம்பிக்கை மேடைப்பேச்சுகளும் இவருக்கு விருப்பமானவை .பல பரிசுகளும் பாராட்டுகளும் விருதுகளும் பெற்றிருந்தாலும் வாசக நெஞ்சங்களின் வாழ்த்தையும் பாராட்டுக்களையுமே தனது அங்கீகாரமாக நினைக்கிறார் இவர் .
   எண்ணற்ற பேட்டிகள் கட்டுரைகள் பிரசுரமாகி இருந்தாலும் சிறுகதைத்தொகுப்பு புத்தகவடிவில் வெளிவருவது இதுவே முதல் முறை . மெல்லிய மயிலிறகு போன்ற எழுத்து  இவருடையது.  பெரிய பிரபலங்களின்  பாராட்டை பெற்றவர் இவர். சிறந்த எழுத்தாளுமை மிக்கவர். சமூக அக்கறை கொண்ட இவர்  கொரோனா சமயத்தில் குடும்பங்கள்  பட்ட  துயரங்கள், முக்கியமாக  பெண்கள் சமாளிக்கும் சவால்கள்  இவற்றை உள்ளடக்கியது இந்த சிறுகதை தொகுப்பு




பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனர் Dr, லட்சுமிப்ரியா







---உமாஅபர்ணா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,