முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழ் பண்டிதர், சித்த மருத்துவர் அயோத்திதாசர்
மே 20, 1845 - இன்று தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழ் பண்டிதர், சித்த மருத்துவர் அயோத்திதாசர் பிறந்தநாள்
பண்டிதர் அயோத்திதாசர் அம்பேத்கர் பெரியார் ஆகியோருக்கு முன்னோடியாக இருந்து சமூக மாற்றுச் சிந்தனைகளை – முற்போக்கு கருத்துக்களை முன்வைத்தவர். அவர் நெடுங்காலமாக வரலாற்றில் மறக்கப்பட்டவராக அல்லது மறைக்கபட்டவராக ஆக்கப்பட்டிருக்கிறார். எனினும், வரலாற்றால் முற்றிலும் புறந்தள்ள இயலாதவராய் உயர்ந்து நிற்கிறார்.
இந்து கலாச்சாரம் என்று கருதப்படும் யாவும் பவுத்த கலாச்சாரத்தின் திரிபுநிலைகளே என்கிறார் அயோத்தி தாசர். .தமிழ்ப்பௌத்தம் என்கிற ஒரு புதிய கருத்தாக்கத்தையும் அவரே முன்வைத்திருக்கிறார். மிகச்சிறந்த பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய அவர், தமிழக அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் ஆதிபௌத்தத்தை மீளுருவாக்கம் செய்த களப்பணியாளராகவும் விளங்கியிருக்கிறார். சாக்கிய சங்கம் கண்டு அதனை வெற்றிகரமாக வழிநடத்தியவர். அதன்மூலம் ஆதிபௌத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
Comments