ஆயிரம் கோடிகளை கொட்டி வாங்கியாச்சு - ட்விட்டரில் பணம் சம்பாதிக்க

 


Elon Musk | ஆயிரம் கோடிகளை கொட்டி வாங்கியாச்சு - ட்விட்டரில் பணம் சம்பாதிக்க எலான் மஸ்க் அடுத்த திட்டம்!


 முக்கியமான செய்தி இருக்கும் ட்வீட்கள் மற்றும் வைரலாகும் ட்வீட்களின் மூலம் எலான் மஸ்க் பணம் சம்பாதிக்க திட்டம் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


கருத்து சுதந்திரம் இல்லை, பதிவுகளை திருத்துவதற்கு வசதி இல்லை என்று தொடர்ந்து ட்விட்டர் மீது குற்றச்சாட்டு பகிர்ந்து வந்த எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன் டிவிட்டரின் கணிசமான பங்குகளை வாங்கியுள்ளார். டிவிட்டர் ஒரு தனி மனிதரின் சொத்தாக மாறியுள்ளது. இதற்கான ஆவணங்கள் தற்போது தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிகாரபூர்வமாக டிவிட்டருக்கு எலான் மஸ்க் தலைமையேற்க சில மாதங்கள் வரை ஆகலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமின்றி, டிவிட்டரில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரப்போகிறது என்பது பற்றியும் பலரும் பேசி வருகின்றனர். இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்துள்ள எலான் மஸ்க், ஆதாயம் இல்லாமல் எந்த காரியத்திலும் ஈடுபட மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், முதலீட்டை பல மடங்காக பெருக்க, டிவிட்டரில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

முக்கியமான செய்தி இருக்கும் ட்வீட்கள் மற்றும் வைரலாகும் ட்வீட்களின் மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், கிட்டத்தட்ட 13 பில்லியன் டாலர்கள் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல வங்கிகளில் இருந்து நிதி பெற்று ட்விட்டரை வாங்கும் பொழுது, எலான் மஸ்க் டிவிட்டர் மூலமாக பணம் ஈட்டும் வழிமுறைகளைப் பற்றி பேசியிருக்கிறார். அது மட்டுமின்றி மூன்றாம் தரப்பினர்கள் மற்றும் வலைத்தளங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கிய பிரபலம் அல்லது நிறுவனங்கள் மூலம் மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் ட்விட்டருக்கு கட்டணம் செலுத்திய பின்புதான் தாங்கள் சொல்ல விரும்புவதை டிவீட் மூலம் சொல்ல முடியும் என்பது போன்ற திட்டத்தை எலான் மஸ்க் கூறியுள்ளார்.


அது மட்டுமின்றி, ட்விட்டர் இல் புதிதாக சந்தா சேவையை தொடங்க இருப்பதாக எலான் மஸ்க் ஒரு சில ட்வீட்களை பகிர்ந்து இருந்தார். பின்னர் அந்த ட்வீட்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தது. இந்த சந்தாவுக்கு கிரிப்டோ கரன்சி மூலமாக பணம் செலுத்தும் ஆப்ஷனும் சேர்க்கப்படும் என்பதையும் டெலிட் செய்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

ட்விட்டர் வருமானத்தை பொறுத்தவரை விளம்பரங்கள் மூலமாக அல்லது ப்ரமோஷன் மூலமாக லாபம் ஈட்ட முடியும் என்று இனி நம்பி இருப்பது சரியாக இருக்காது. எனவே வேறு விதமான வருமானம் பெறும் வழிகளையும் முயற்சி செய்து பார்த்து இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் தன்னுடைய முயற்சி வெற்றி பெற்றால், போர்டுக்கான சம்பளம் எதுவுமே கொடுக்க வேண்டாம் என்றும், ஓராண்டுக்கு கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர்கள் சேமிக்க முடியும் என்று தன்னுடைய வங்கிகளுக்குத் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள், டிவிட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க்கின் கைக்கு கிடைத்து விடும்.


courtesy:https://tamil.news18.com/


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,