பார்த்திபன் வீசி எறிந்த மைக்

 பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் 'இரவின் நிழல்'. உலகின் புது முயற்சியாக இந்த படம் ஒரே ஷாட்டில் லான் லீனியர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இப்பட விழாவில் நடிகர் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பம் சர்ச்சையானது. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார்.



இதுபற்றி ரோபோ சங்கர் கூறுகையில், ‛‛ஒட்டுமொத்த விழாவையும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே கவனித்து வந்தார். மைக் பிரச்னையானதால் அந்த நேரத்தில் சற்று டென்சனாகிவிட்டார். இதற்காக போனில் என்னிடம் பல முறை மன்னிப்பு கேட்டார். அவர் பேசியதை கேட்டு நானே கண்கலங்கி விட்டார். அப்படி சொல்லாதீங்க, நான் எதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றேன். நிஜத்தில் பழகுவதற்கு இனிமையான நபர். யாரையும் புண்படுத்தாத ஒரு மனிதர். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். 25 படங்களில் நடித்த அனுபவம் இந்த படத்தில் கிடைத்தது. படத்தில் ஒன் மேன் ஆர்மியாக வேலை பார்த்துள்ளார் பார்த்திபன். உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த விருதையும் இந்த படம் பெறும். இந்த படத்தில் நான் இருந்தது பெருமை. உலகமே திரும்பி பார்க்க போகும் ஒரு படமாக இருக்க போகிறது என்கிறார்.
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி