திரைப்பட பின்னணிப் பாடகர் அமரர் டி. எம். சவுந்திரராஜன் நினைவு நாள்
இன்று பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் அமரர் டி. எம். சவுந்திரராஜன் நினைவு நாள் ! (2013 மே 25 ) இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்லாயிரம் திரை இசைப் பாடல்களையும் மற்றும் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். டி.எம்.சவுந்திரராஜன்.
அதன் பிறகு மந்திரக் குமாரி, தேவகி, சர்வாதிகாரி எனப் பல படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. காதல் பாடலாகட்டும், தத்துவப் பாடல்களாகட்டும் அந்தந்த பாடலின் ஜானருக்கு ஏற்ப தனது குரலை வழங்கியிருப்பார் டி.எம்.எஸ்., 1957’ல் வெளியான மக்களைப் பெற்ற மகராசி என்ற படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரி பூட்டி, வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு.’ பாடல் காற்றில் என்றென்றும் மிதக்கும் இன்ப ரகம். பக்திப்பாடல்கள் பாடுவதில் டி.எம்.எஸ்’க்கு நிகர் அவர் தான்., திருவிளையாடல் படத்தில் ‘பாட்டும் நானே பாவமும் நானே’, அருணகிரிநாதர் படத்தில் வரும் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ போன்ற பாடல்களைக் கேட்டு வளர்ந்த அவர்கால வயதினர் பாக்கியசாலிகள். குறிப்பாக முருகன் பாடல்களை டி.எம்.எஸ் பாடும் போது பக்தியின் பரவசத்தில் மயங்காத முருக பக்தர்களே கிடையாது... “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்...”., “உள்ளம் உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே...”., “அழகென்ற சொல்லுக்கு முருகா... உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா...”., தமிழ் நம்பி எழுதிய “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்...”., போன்ற பாடல்கள் நம் பால்யத்தை இன்றும் என்றும் நினைவுபடுத்தும் அல்லவா...?
இசை அமைப்பாளர்கள், ஜி.ராமநாதன், எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், ஆகியோர், டி.எம்.சவுந்திரராஜனை முழுமையாக பயன்படுத்தி, அருமையான பாடல்களை கொடுத்தனர். கண்ணதாசன், எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., கூட்டணியில், உருவான பாடல்கள், சாகாவரம் பெற்றவை.
அவரது மறைவு, அவரது பாடல்களை – அவரது வளமிக்க குரலை மேலும் நிரந்தரமாக்கவே செய்கிறது. கிராமப்புற திருமண இல்லங்களின் ஒலி பெருக்கிகளில், நகர்ப்புற இசைக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில், ஆலய திருவிழாக்களில், மன்றங்களின் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத குரலாக டி எம் எஸ் ஒலித்துக் கொண்டு தான் இருப்பார்
,
Comments