கோடையில் அதிகரிக்கும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள் : தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

 கோடையில் அதிகரிக்கும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள் : தினமும் ஒன்று சாப்பிடுங்க..! 
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தில் இருந்து உடலை ஆரோக்கியமான வழிகளில் பாதுகாப்பது முக்கியம். 


சரியான உணவு வகைகளை சாப்பிடுவது, கூடுமான வரை வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது,தேவையில்லாத உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது, அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.


இதுபோன்ற கோடை காலத்தில் இந்த சீசனில் கிடைக்க கூடிய பழங்கள், எலுமிச்சை சாறு கலந்த பானங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அவை உங்களை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருக்க உதவுகின்றன. 


கோடை காலத்தில் என்ன மாதியான உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை குறைக்கலாம் என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...


 உடல் வெப்பநிலை அதிகரிப்பது ஏன்? 


அதிகப்படியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் போது செரிமானம் அதிகரிப்பதால் வயிற்று பகுதி சூடாகிறது. உடலின் அதிக வெப்பநிலையை சமாளிக்க வியர்வை உதவுகிறது. 


இது உடலின் அதிகப்படியான வெப்பத்தை இயற்கையான வழியில் குளிர்ச்சி செய்ய உதவும் அமைப்பு ஆகும்.


வெப்பம் அதிகமுள்ள காலத்தில் காரமான மற்றும் மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும், காஃபின் நிறைந்த பொருட்களையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது.


உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 


கோடையில் வயிறு குளிர்ச்சியாக இருக்கவும், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும் குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டும்.


 காய்கறிகள் மற்றும் பூசணி: 


கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது வயிற்றில் உருவாகும் சூட்டை குறைத்து, செரிமான அமைப்பை பாதுகாக்க உதவுகிறது.


 வெங்காயம்: 


ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியாக செயல்படக்கூடிய குர்செடின் நிறைந்ததாக அறியப்படும் வெங்காயம், உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியூட்டக்கூடிய பொருளாகவும் இருந்து வருகிறது. சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் இது நன்மை பயக்கும்.


 வெங்காயத்துடன் வெள்ளரி, முள்ளங்கி மற்றும் கேரட்டையும் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். இத்துடன் எலுமிச்சை மற்றும் கருப்பு உப்பு சேர்ப்பது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்கவும் மற்றும் உங்கள் பசியை மேம்படுத்தும் உதவுகிறது.


 சத்து மா மற்றும் கோண்ட் கதிரா: 


Sattu என்பது பருப்புகளும் சிறுகூலங்களும் கலந்த மாவு அல்லது பொடியாகும். 


கோண்ட் கதிரா உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. 


இதை குடித்த பிறகு, உங்கள் உடல் உடனடியாக ஆற்றலைப் பெறும் மற்றும் நீங்கள் மிகவும் ஃபிட்டாக உணர்வீர்கள்.


மண்பானைத் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..? தெரிந்துகொள்ளுங்கள்..!


சத்து சர்பத் குடல் இயக்கத்தை சீராக்கி கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இந்த இரண்டு பானங்களும் வெப்பத்தை வெல்ல சிறந்தவை.


 பெல் கா சர்பத்: 


பெல் கா சர்பத் சன் ஸ்டோக் வராமல் தடுக்க உதவும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை அளிக்கிறது. இருப்பினும், பெல் கா சர்பத் தயாரிக்கும் போது அதிக சர்க்கரையை பயன்படுத்த கூடாது.


 மண்பானை தண்ணீர்: 


கோடை காலத்தில் ப்ரிட்ஜ் தண்ணீரை குடிப்பதை விட தண்ணீரை மட்கா அல்லது பானையில் உள்ள தண்ணீரைக் குடிப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


 ஏனெனில் பானையில் சேகரித்து வைக்கப்படும் தண்ணீர் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். 


இது உடல் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம் சன் ஸ்டோக் ஆபத்தை குறைக்க உதவுகிறது.


 மேலும் மண் பானையில் உள்ள தண்ணீரில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,