எழுத்துச் சித்தர்

 எழுத்துச் சித்தர் என்றழைக்கப்பட்ட பாலகுமாரன் நினைவு தினம் 15/5/2022இன்று.!




அன்னார் குறித்து முன்கதை சுருக்கக் குறிப்புகள்! 🥲
தஞ்சாவூரில் திருக்காட்டுப் பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் 1946ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி பிறந்த பாலகுமாரன்,
பள்ளி இறுதிப் படிப்புவரை மட்டுமே படித்தவர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த அவர், 1969வாக்கில் கவிதைகளை எழுதத் துவங்கினார்.
முதலில் கசடதபற இதழிலும் பிறகு கணையாழி ஆனந்த விகடன், கல்கி போன்ற வெகுஜன இதழ்களிலும் அவர் எழுத ஆரம்பித்தார்.
சிறுகதைகளிலும் பிறகு நாவல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த பாலகுமாரன், 274 நாவல்களை எழுதியிருக்கிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார் அவர்.
எழுத்தாளர் சாவி நடத்திவந்த சாவி இதழிலும் சிலகாலம் பாலகுமாரன் பணியாற்றியிருக்கிறார்.
இவருடைய நாவல்களில் மெர்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தகுந்த படைப்புகளாகும்.
"கல்கியில் வெளிவந்த இரும்புக் குதிரை ஒரு மிகச் சிறந்த படைப்பு.
எல்லாவற்றுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை அந்த நாவல் காட்டியது.
அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது.
உடையார் என்ற பெயரில் ராஜராஜ சோழனைப் பற்றியும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியும் 6 பாகங்களில் இவர் எழுதிய நாவல் இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று.
மெர்க்குரிப் பூக்கள் வடிவமைப்பிலும் நேர்த்தியிலும் மிகச் சிறந்த படைப்பு. அந்தத் தொடர் வெளிவந்த காலத்தின் இளைஞர்களின் மனநிலையை அது வெகுவாகப் பாதித்தது.
தமிழ்க் கலாசாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த தேர்ச்சியும் ஈடுபாடும் இருந்தது அவருக்கு.
பாலகுமாரன் தனது இறுதிக்காலத்தில் ஆன்மிகம் குறித்து அதிகம் எழுதலானார்.
சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மீகக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
தமது 72 ஆம் வயதில் மரணமுற்றார்.
*அவருடைய எழுத்துகளுக்கு ஒருபோதும் மரணம் கிடையாது*

5

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்