பேக்கிடெர்ம் டேல்ஸ் வெளியீடா ன முனைவர் அ.திலகவதியின் 'யாதுமாகி' எனும் சிறுகதை தொகுப்பு
எழுத்தாளர். பிரபா மேடத்தால் தொடங்கப் பெற்றது சங்கப் பலகை. இதன் ஆண்டு விழா கோயமுத்தூரில்22,05,2022 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. சங்கப் பலகையின் தூண்களான பிரபா மேம், அவர்களது தாயார் ,திரு.சுரேஷ்சந்த், எழுத்தாளர். கணேஷ்பாலா, எழுத்தாளர். ரிஷபன், எழுத்தாளர். சப்தரிஷி லா. சா. ராமாமிருதம் ஆகியோரின் ஆசிகளோடு கோவையில் உள்ள பசு வண்ணன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பாக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவுநர் உமா அபர்ணா அவர்கள் நூல் வெளியீட்டு விழாவை நடத்தினார்
இவ் விழாவில் முனைவர் அ.திலகவதி அவர்களுடைய 'யாதுமாகி' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
பேக்கிடெர்ம் டேல்ஸ் வெளியீடா ன
முனைவர் அ.திலகவதியின் 'யாதுமாகி' எனும் சிறுகதைத் தொகுப்பில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு சிறுகதையிலும் பெண்களின் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளை ஒவ்வொரு விதமாகப் பேசி இருக்கிறார்.பெண்என்பவள் சாந்தம், கோபம் , அன்பு, இரக்கம் ,கருணை என எல்லா வடிவுமாக இருப்பவள். அத்தகைய பன்முகத் தன்மைகளின் பாங்கினை குறிக்கும் குறியீடாகவே 'யாதுமாகி' எனும் தலைப்பு இச்சிறுகதைத் தொகுப்பிற்கு சூட்டப் பெற்றுள்ளது.பெண்ணியப் படைப்பாளிகளால் இதுவரை தொடாத பல விடயங்களைச் சிறுகதையாசிரியர் தொட்டிருக்கிறார்.சிறுகதை உத்திகளைச் சரியாகப் பயன்படுத்திக் கதைகளை நகர்த்திச் சென்றிருப்பது தேர்ந்த புலமையைக் காட்டுகிறது.ஒவ்வொரு கதையிலும் கதைக்கரு செறிவாகவும் அடர்த்தியாகவும் அமைந்திருப்பது இச்சிறுகதைத் தொகுப்பிற்கு மிகப்பெரிய பலம். இச்சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் சிறிதேனும் மன உறுத்தல் இல்லாமல் இருக்காது என்பது திடம்.மன்னிப்பாயா? சிறுகதையில் வருகிற சாந்தியின் கடிதம் ஒன்றே அதற்குத் தக்க சான்றாகும்.ஆணுக்கு நேரெதிராக பெண் விடுதலையைப் பேசாமல் ஆணோடு இயைந்த பெண்களுக்கான சமூக விடுதலையை முன்னிறுத்திப் பேசியிருப்பது பெண்ணியப் படைப்புகளில்இதுவரை இல்லாத புதுமையான போக்கு. இது 21-ஆம் நூற்றாண்டில் நிலவி வரும் பெண்ணடிமையின் இன்னொரு பரிணாமத்தைச் சுட்டுகிறது.முனைவர் அ.திலகவதியின் எழுத்து பெண்ணிய எழுத்துகளில் முக்கியத்துவம் பெறும் என்பதில் ஐயமில்லை.
ஜி. ஏ . பிரபா மேம்
Comments