ரம்மியமான ரமலான் கொண்டாட்டம்

 ரம்மியமான ரமலான் கொண்டாட்டம்







திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி  இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் ரம்யமான ரமலான் கொண்டாடப்பட்டது இந்த ரம்மியமான ரமலான் கொண்டாட்டத்தில் 150க்கு மேற்பட்ட கலந்து கொண்டனர். குழந்தைகளுடன் இந்த ரம்மியமான ரமலான் கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

 ஆவடி  அருந்ததிபுரதில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குழந்தைகளின் ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றை சிறப்பாக சந்தோஷமாக இந்த ரமலானை கொண்டாடினார்கள். சிறப்பு விருந்தினராக சமூக செயல்பாட்டாளர் மலருங்கள் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் திரு விக்னேஸ்வரன், அவர்கள் அனிச்சமலர் பத்திரிகையின் ஆசிரியர் கலைஞானி சேகர் அவர்கள், ஹரிஷ்குமார்,தினேஷ் அவர்கள் ,ராஜேந்திரன் அவர்கள், கிருஷ்ண பிரசாத் அவர்கள், மற்றும் கார்த்திக் தம்பதியினர் ,வெங்கடேஷ் தம்பதியினர் கலந்து கொண்டனர்.

 இந்த விழாவை திருமதி கோமளா சிவகுமார் அவர்கள் தலைமையில் சமூக செயல்பாட்டாளர் திரு அல்லாபகேஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு தன்னார்வலர்கள் சொப்னா பாய்,அகல்யா ,தர்மேந்திரா, மகாலட்சுமி ,வணங்காமுடி, பிரியாதர்ஷினி,ஷோபனா,தமிழ்செல்வி மற்றும் ஹேமலதா ஆகியோரின் பங்களிப்பு சிறப்புக்குரியது .

குழந்தைகளை பத்திரமாக அழைத்து வந்து பத்திரமாக அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் ஹேமவதி,ஜீவிதா, லோகேஷ், கார்த்திகா, மேகலா ,குணசுந்தரி,கீர்த்தனா மற்றும் கோமதி  ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர் . மொத்தத்தில் இந்த ரம்மியமான ரமலான் வெகு சிறப்பாக நடைபெற்றது கலந்துகொண்ட அனைவருக்கும் ரமலான் விருந்தாக இனிப்புடன் பிரியாணி அளித்து மகிழ்வித்து மகிழ் மகிழ்ந்தனர்.











Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி