சத்யஜித் ரே போல் பன்முகத்திறமை வாய்ந்தபாலு மகேந்திரா

 

May be an image of 1 person and standing

தமிழ்த்திரையுலகில் சத்யஜித் ரே போன்று யாராவது இருக்கின்றார்களா என்று எண்ணிப்பார்த்தால் முழுமையாக அவரைப்போன்றில்லாவிட்டாலும், ஒரளுக்காவது அவரைப்போன்ற ஒருவர் இருக்கின்றார். யார் அவர் என்று நீங்கள் கேட்கலாம். அவரும் சத்யஜித் ரே போல் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். சத்யஜித் ரே இயக்கம், திரைக்கதை, கதை, இசை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர். அவர் சில படங்களுக்கு இயக்கத்துடன் இசையினையும் வழங்கியிருக்கின்றார். இவரும் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். இயக்கம், ஓளிப்பதிவு, 'எடிட்டிங்', திரைக்கதை, கதை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர்தான்.

இருவருக்கும் இன்னும் சில ஒற்றுமைகளுள்ளன. இருவருமே எழுத்தாளர்கள். அது தவிர இருவருமே 'பைசிக்கிள் தீவ்' திரைப்படத்தைப்பார்த்து விட்டு , அதன் தூண்டுதலால் தரமான சினிமாவை எடுக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டவர்கள். இப்பொழுது உங்களுக்கு அவர் யாரென்பது புரிந்திருக்கும். அவர்தான் பாலு மகேந்திரா.

ஏன் பாலு மகேந்திராவை நூற்றுக்கு நூறு வீதம் சத்யஜித் ரேயுடன் ஒப்பிட முடியாது என்று கேட்கலாம். அதற்குக் காரணம்: ரே ஒருபோதுமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுத்தவரல்லர். ஆனால் பாலு மகேந்திரா விட்டுக்கொடுத்தவர். அதனால் அவரது திரைப்படங்கள் பல ரேயின் படங்களைப்போன்று உன்னத நிலையினை அடையவில்லை. அவரே இதனை உணர்ந்திருக்கின்றார். அதனால்தான் அவர் தான் எடுத்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படங்கள் வீடு மற்றும் சந்தியாராகம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார். இவையிரண்டிலுமே குறைந்தளவு விட்டுக்கொடுப்புகள் செய்ததாகவும் நினைவு கூர்ந்திருக்கின்றார்.
இவ்விதம் நான் கூறுவதைக்கேட்டு யாரும் ஏன் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலாவை விட்டு விட்டீர்கள் என்று போர்க்கொடி தூக்கிவிடாதீர்கள். இது என் கருத்து. உங்கள் கருத்தாக இருக்க வேண்டுமென்பதில்லை. பாலச்சந்தர், பாரதிராஜா, பாலா எல்லாருமே சிறந்த இயக்குநர்கள்தாம். ஆனால் அவர்கள் அனைவருமே வர்த்தக சினிமாவுக்காக அதிக அளவில் விட்டுக்கொடுப்பு செய்தவர்கள். கதை , ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு, கதைப்பின்னல், இசை எல்லாவற்றிலுமே மிகுந்த விட்டுக்கொடுப்புகளைச் செய்தவர்கள். பாலச்சந்தரின் திரைப்படங்களில் பல காட்சிகள் நினைவில் நிற்கும்படியானவை. சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய திரைப்படங்களிலெல்லாமுள்ள விட்டுக்கொடுப்புகளை இயன்ற வரையில் நீக்கி, அவற்றைச் சீரமைத்தால் ஓரளவு தேறும் சாத்தியமுண்டு. பாரதிராஜா கிராமத்தை, கிராமிய இசையைத் தமிழ்ச்சினிமா உலக்குக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவர் திரைப்படங்கள் அனைத்துமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுப்புகள் அதிக அளவில் செய்தவைதாம். என்னைப் பொறுத்தவரையில் என் வரிசை இவ்வாறிருக்கும்: பாலு மகேந்திரா, பாலா, மகேந்திரன், பாலச்சந்தர் & பாரதிராஜா.
- வ.ந.கிரிதரன் பக்கங்கள்

1

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,