நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் நினைவு தினம்

 மே 24, 

நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் நினைவு தினம் இன்று -  மே 24, 1543

நிக்கோலஸ் கோப்பர்நிகஸ்


போலந்து நாட்டை சேர்ந்த  ஒரு வானியலாளரும் ,கணிதவியலாளரும் ,பொருளியலாளருமாவார் .

சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த கொள்கையை மாற்றி சூரியனை  மையமாகக் கொண்டே கோள்கள்  இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கோப்பர்னிக்கஸ் ஒரு மருத்துவராகவும் , ஒரு

நீதிபதியாகவும், ஆளுநராகவும் , விளங்கியதுடன் கத்தோலிக்க மத குருவாகவும் இருந்தார். எனினும் மதக் கொள்கைகளுக்கு எதிரான சூரிய மையக் கொள்கையை அவர் வெளியிடத் தயங்கவில்லை. நமக்கு புதிய சிந்தனைகள் தோன்றலாம். ஒருவேளை அவற்றைத் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாமலும் போகலாம். எதையும் சிந்தனையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றை எழுத்தில் அல்லது கணினியில் சேமித்து வையுங்கள். வருங்காலத்தில் இது பயன்படும். கொஞ்சம் தாமதமாகச் செய்தார் என்றாலும் கோப்பர்நிக்கஸ் தன் கருத்துகளை நூலாக உருவாக்கினார்.    இதுவே  கோப்பர்நிகஸ்  இறக்குமுன்னர் செய்த இறுதிச்சாதனை ஆகும்இறக்குமுன்




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி