மதுவிலக்கு பற்றி அண்ணா :

 காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கிறது. அண்ணா முதல்வராகிறார். மாநிலத்தின் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. உடனே சில அதிகாரிகள், “மதுவிலக்கை ரத்து செய்து, மதுக்கடைகளை திறப்போம். அரசுக்கு வருமானம் கிடைக்கும்” என்று ஆலோசனை சொல்கிறார்கள்.


சட்டென சொல்கிறார் அண்ணா: “அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்துச் செய்வது மூட்டைப் பூச்சிக்காக வீட்டை கொழுத்துவதற்கு ஒப்பானது!”
இன்னொரு உதாரணமும் அண்ணா சொன்னார்: “மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்”
இன்னொரு “புத்திசாலி” அதிகாரி, முதல்வர் அண்ணாவிடம், “மதுவிலக்கால் மக்களிடம் பணம் புழங்கும்” என்றார்.
விரக்தி சிரிப்பை உதிர்த்த அண்ணா,” மதுவிலக்கை நீக்குவதால் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பது சரியல்ல. மக்கள் இப்போது, உணவு, உடை, போக்குவரத்துக்கு செய்துவரும் பணத்தில் இருந்துதானே மதுவை வாங்குவார்கள். இது எந்த விதத்தில் அவர்களுக்கு நலம் பயக்கும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
அது மட்டுமா, “மதுவிலக்கு இல்லாவிட்டால், நிலைகுலைந்து தள்ளாடும் நபர்களை பார்க்க நேரிடும். இப்போது அது இல்லை. இந்த நிலையை நான் வரவேற்கிறேன்.
இன்று எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு, தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம்” என்றார்.
அண்ணா, “தமிழக அரசு மதுவிலக்கு திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது. ஆனால் நம்மைச் சுற்றி உள்ள அண்டை மாநிலங்கள் மதுவிலக்கை தளர்த்தி இருக்கின்றன.
இது நேர்மைக்கு தண்டனையும், நேர்மையின்மைக்கு பரிசும் அளிக்கப்படுவது போல் இருக்கிறது. ஆனாலும் மதுவிலக்கை ரத்து செய்ய முடியாது” என்றார் உறுதியாக.
அதோடு, “இந்த நிலைக்குக் காரணம் மத்திய அரசுதான். மதுவிலக்கு காந்தீய கொள்கை. மதுவிலக்கைத் தவிர நம் நாட்டுக்கு தேசீய நெறிமுறை வேறு ஏது? அதைக்கூட ஒழுங்காக நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டது.
எது எதற்கோ தேசீய அடிப்படையில் கொள்கை வகுக்க மத்திய அரசு முன் வருகிறது. கல்வித்திட்டத்தில் கூட தேசீய கல்வித்திட்டம் என்று திட்டம் வகுக்கின்றனர். ஆனால் மதுவிலக்குக் கொள்கை நாடு முழுதும் ஒரே சீரானதாக இருக்க திட்டம் வகுக்க மத்திய அரசால் இயலவில்லை” என்றார்.
இந்த கருத்து இன்றும் பொருந்துகிறது.
“மேலை நாடுகளில் எல்லாம் மதுவிலக்கு இல்லையே” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “அங்கே அளவு தெரிஞ்சி குடிக்கிறாங்க. நம்ம ஆளுங்களுக்கு அளவு தெரியாது. குடிச்சி சீரழிவான்” என்றார்.
என்ன ஒரு தீர்க்க தரிசனம்! தமிழர் மீது எவ்வளவு அக்கறை

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி