திரைப்படப் பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியம்
திரைப்படப் பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியம்
பிறந்தநாள் இன்று
1920 இல் திருவாரூர் அருகேயுள்ள வேளூக்குடியில் மாரிமுத்து, கோவிந்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவரது தாயார் தேவாரம், திருவாசகம், பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார். தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். வறுமையின் காரணமாக இவரது தாயாரால் ஆறாம் வகுப்புக்குமேல் படிக்க வைக்க இயலவில்லை. இதன்பிறகு வேளாண் தொழிலாளராகவும், மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை, துணிக்கடை போன்றவற்றில் வேலை செய்தார். பொட்டலம் மடிக்கும் வேலையின்போது ஓய்வு நேரத்தில் பழைய புத்தகங்களைப் படித்துவந்தார். இதனால் எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு சிறுகதைகளை எழுதத் துவங்கினார். எழுத்தாளர்கள் கா. மு. ஷெரீப், மேதாவி என்னும் கோ. த. சண்முகசுந்தரம் ஆகியோர் இவரின் சொந்த ஊரைச் சேர்ந்த இளமைக்கால நண்பர்கள். இவர் ஜெயலட்சுமிய 1947 ல் திருமணம் செய்து, ஐந்து ஆண் மக்களையும், இரண்டு பெண் மக்களையும் பெற்றார். இவரது இளைய மகன் கு. மா. பா. கபிலன் ஆவார்.
பத்திரிகையாளராக
தொகு
சி. பா. ஆதித்தனார் மதுரையில் இருந்து வெளியிட்ட தமிழன் இதழின் துணை ஆசிரியராக இணைந்தார். பின்னர் கோவையில் திருமகள் இதழில் பணியாற்றினார். 1945 இல் கொழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்தார். இந்திய விடுதலைக்குப்பிறகு 1947 இல் நாடு திரும்பியவர் தமிழன் குரல் என்ற மாதம் இருமுறை இதழை நடத்தி இழப்பை சந்தித்ததால் அதனை விற்றுவிட்டு, சென்னை வந்து ம.பொ.சியின் தமிழ் முரசு இதழில் நுணை ஆசிரியராக இணைந்தார். அக்காலக்கட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் தமிழாசிரியராக இருந்த திருவேங்கடம் என்பவர் இவரின் எழுத்தாற்றலைக் கண்டு இவருக்கு மரபுக்கவிதைகளை எழுத கற்றுக்கொடுத்தார். இதன் பிறகு 1949 ஆம் ஆண்டில் பாரதிதாசன் தலைமையில் கோவையில் நடந்த கவியரங்கில் தன் 28 ஆம் வயதில் கலந்துகொண்டார்.
அரசியலில்
தொகு
சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் அரசியல் பணியாற்றியவர். அக்கழகத்தின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பாரதிதாசன் மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
எழுத்தாளர்
தொகு
ஏவிஎம் நிறுவனத்தின் கதை இலாகாவில் மாத ஊதியத்தில் இணைந்தார். அவர்களின் ஓர் இரவு படத்தின் உதவி இயக்குநராக ஆக்கப்பட்டார். அண்ணாதுரை எழுதிய வசனங்களை படி எடுத்தல் இவரது பணி. படி எடுக்கும்போது தன்னார்வத்துடன் ஒரு காட்சிக்கு இவர் ஒரு பாடலை எழுதினார். அந்தப்பாடல் படக்குழுவுக்கு பிடித்துவிட்டதால் அது பாடல் பதிவு பெற்று, அதே படத்தில் மேலும் இரண்டு பாடல்கள் எழுத வாய்யப்பு கிடைத்தது. அதன்பிறகு பல படங்களுக்கு பாடல்களை எழுதினார்.[2]
1962 ஆம் ஆண்டில் கொஞ்சும் சலங்கை மற்றும் 1966 இல் மகாகவி காளிதாஸ் திரைப்படங்களுக்கான திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதினார். மேலும் 1953 இல் பொன்னி , 1962 இல் மடாதிபதி மகள் போன்ற திரைப்படங்களுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதினார். ஓர் இரவு (1951), கோமதியின் காதலன் (1955) திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் வேலைக்காரன் (1952) திரைப்படத்திற்கு கதை மற்றும் பாடல்களையும் எழுதினார்.
எழுதிய சில திரைப்படப் பாடல்கள்
தொகு
யாரடீ நீ மோகினி (உத்தம புத்திரன், 1958)
சின்னையா என்றழைத்த (தங்கமலை ரகசியம் படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
சித்திரம் பேசுதடி (சபாஷ் மீனா)
காணா இன்பம் கனிந்த்தேனோ
குங்குமப் பூவே கொஞ்சு புறாவே (மரகதம்)
அன்பே என் ஆராவமுதே வாராய்
குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே (மரகதம் படத்தில் இடம்பெற்று நடிகர் சந்திரபாபுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல்)
அமுதைப் பொழியும் நிலவே (தங்கமலை ரகசியம்)
மாசிலா நிலவே நம் காதலை (அம்பிகாபதி)
நெஞ்சினிலே நினைவு முகம் (சித்ராங்கி)
சிரிக்கத் தெரியுமா (குழந்தைகள் கண்ட குடியரசு, 1960)
கவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே (அண்ணையின் ஆணை)
என்ந்தன் உள்ளம் உள்ளிவிளையாடுவதும் ஏனோ (கணவனே கண்கண்ட தெய்வம்)
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இயற்றினார்.
Comments