மனமுடைந்த நிலையில் தலைவர்




ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸான அண்ணாத்த படம் கம்ர்ஷியலா டல் ஆனதை அடுத்து ரஜினிகாந்த் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்பதற்காக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு ரஜினியின் தலைவர் 169 திரைப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படத்தின் தோல்வியால் மனமுடைந்த நிலையில் தலைவர் 169 திரைப்படத்தின் கதையை கவனமாக எழுதிவருகிறார்.
மேலும் அடிக்கடி ரஜினியிடம் சென்று கதையை கூறிக் கொண்டு வருகிறாராம். மேலும் நெல்சனின் நண்பரும் முன்னணி நடிகருமான சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்குது.
இந்நிலையில் தற்போது கன்னட திரை உலகின் பிரபல நடிகர் சிவராஜ்குமார் ரஜினியுடன் கைகோர்த்து நடிக்கவுள்ளார். கன்னடத் திரையுலகின் 80 களில் இருந்து தற்போது வரை கன்னட திரை உலகின் மாஸ் நடிகராக வலம் வரும் சிவராஜ்குமார், மறைந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணன் ஆவார். கன்னடத்தில் 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சிவராஜ்குமார் தற்போது முதல்முறையாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தில் என்ட்ரி ஆகி முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்குது.
 From The Desk கட்டிங் கண்ணையா!


Prabhala Subash, Kavi Murasu Praveen and 18 others

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி