தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

 

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்








தேவசகாயம் பிள்ளை புனித பட்டம் பெற தகுதியானவர் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கத்தோலிக்க திருச்சபையில் இத்தாலியிலுள்ள வாடிகன் நகரிலுள்ள ரோம்  நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், இன்று புனிதர் பட்டம் வழங்கினார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயத்தை புனிதராக போப்பாண்டவர் ஏற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயம், 1712ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பிறந்தார். தேவசகாயம் பிள்ளை என்ற பெயரில் இந்து குடும்பத்தில் பிறந்த இவர் கிறிஸ்துவ மதத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தன் பெயரை லாரன்ஸ் என்று மாற்றிக்கொண்டவர். இவர் 1749ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தில் தன்னை இணைத்து கொண்டார். சமூகத்தில் நிலவிய சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக இவர் குரல் கொடுத்தார். அத்துடன் இவர் சாதிய சமுத்துவத்தை போதனை செய்து வந்தார். இவர் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள அரண்மனையில் வீரர்களுக்கு போர் பயிற்சி, ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அங்கு பணியாற்றிய நீலகண்டபிள்ளைக்கும், டிலனாய்க்கும் இடையே நெருங்கிய பழக வாய்ப்பு கிடைத்தது. இயேசு கிறிஸ்துவின் வரலாறுகளை டிலனாயிடம் இருந்து கேட்டு தெரிந்த நீலகண்டபிள்ளை மனம் கவரப்பட்டார்.


இதை தொடர்ந்து, அன்றைய பாண்டிய நாட்டின் இடமான நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் இருந்த தேவாலயத்தில் திருமுழுக்குப் பெற்று தேவசகாயம் பிள்ளை என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். மதம் மாறியதால் அவர் பணியாற்றி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு அவரின் பணிகள் பறிக்கப்பட்டது. 


இதன்காரணமாக இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர், அதை பொருட்படுத்தாமல் இறைப் பணியை முன்னிலை படுத்தியதால் அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைதட்டு பகுதியில் சிறைவைக்கப்பட்டு, 1752ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை சுடும்போது மலையில் இருந்து விழுந்த ஒரு கல் பாறையில் அடித்து மணி சத்தத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இன்றும் அந்த இடத்தில் அந்த பாறையும் கல்லும் வைக்கப்பட்டுள்ளது, அதனை அடித்தால் மணி சத்தமும் கேட்கிறதாம். அதனால் அந்த இடத்திற்கு மணியடிச்சான் பாறை என்று பெயர் வைத்து மக்கள் மணி அடித்து வேண்டிக்கொள்கிறார்கள். கொல்லப்பட்ட இவருடைய உடல் கன்னியாகுமாரி மாவட்டம் கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இவருடைய இறப்பிற்கு பின் இவருக்கு இறையூழியர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவருக்கு மறைசாட்சியாக  அறிவிக்கப்பட்டார். முக்திப்பேறு பெற்றவர் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான ஆவணங்கள் சேகரித்து வாடிகனுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வாடிகனில் இருந்து இவருக்கு புனிதர் பட்டம் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் 1.30 மணிக்கு மறைச்சாட்சி தேவசகாயத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதன்மூலம் வரலாற்றில் முதன் முறையாக தேவாலயத்தின் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.  

இந்நிலையில், ரோமில் தேவசகாயம் பிள்ளைக்கு, புனிதர் பட்டம் வழங்கப்படும் நிலையில், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறை என்பதால், இது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அவரை கவுரவப்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ரோம் சென்றுள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் வாடிகனில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

video link


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,