இந்தியாவின் முதல் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தியவர்.

 947 இந்திய விடுதலைக்குப் பிறகு, கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை சீனா ஆக்கிரமித்தது. அப்போதைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா சபைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது, எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.

இதற்குச் சீனா  "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்ரமிக்கவில்லை. எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட  பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்" என்று பதில் கூறியது.

சீனா குறிப்பிட்ட இந்தியப் பேரரசரின் பெயர் ஔரங்சேப்.

உண்மையில் ஔரங்சேப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. இதைக் குறித்து பேரரசர் ஔரங்சேப், அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச (Ching dynasty) மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு (Shunji I) எழுதிய கடிதத்தில், "கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி.  அது எங்கள் இந்து சகோதரர்களுக்கு  புனிதமான இடம். எனவே, அந்த இடத்தை விட்டுவிலகுங்கள்" என எழுதினார்


.

கடிதம் எழுதி ஒன்றரை மாதமாகியும் சீன தரப்பிடமிருந்து பதில் இல்லாததால் குமாவோன் பகுதி அரசர் பாஜ் பஹதூர் சந்த் அவர்களின் படையுடன் இணைந்து குமாவோன் வழியாக மலையேறிச் சென்று சீனாவைத் தாக்கி, கைலாஷ் மானசரோவர் பகுதியை இந்தியாவுடன் மீண்டும் இணைத்தார்.

 தீவிர இஸ்லாமிய அரசர் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பரப்புரை செய்யப்படுகின்ற பேரரசர் அவுரங்கசீப்தான்  இந்தியாவின் முதல் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தியவர்.

வரலாற்றின் இந்த பக்கங்கள், இந்தியா விடுதலை அடைந்த காலத்து ஐநா சபையின் ஆவணங்களில் உள்ளன.அந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பாக உள்ளன.

ஆதாரம்.

ஹிஸ்டரி ஆஃப் உத்தராஞ்சல் - உத்தராஞ்சல் வரலாறு.




ஆசிரியர்: ஓ.சி. ஹாண்டா.

மற்றும்

த டிராஜிடி ஆஃப் திபத் - திபத்தின் துயரம்.

ஆசிரியர்: மன்மோஹன் ஷர்மா.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,