எழுத்தாளர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன்

 இன்று பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் (Muktha Srinivasan,) மூன்றாவது ஆண்டு நினைவு  தினம்.  29/05/2018  இவர்  தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளரும் ஆவார்., 65 படங்களை இயக்கி உள்ளார்.  நாயகன்.. உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். இவர்  சிறந்த எழுத்தாளரும் ஆவார்.தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்     சீனிவாசன் துவக்கத்தில் பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிப்பணிகளில் பங்கேற்று வந்தார். 1946இல் கம்யூனிஸ்ட்  கட்சி தடை செய்யப்பட்டபோது, அரசு அலுவலராக இருந்த சீனிவாசன் வேலையிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திரைப்படத்துறையில் இருந்த இவரது தமையனார் இராமசாமியின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு பிறகு திரைப்படத்துறையில் நாட்டம் செலுத்தினார். இவரது துவக்க கால திரைப்படங்களான முதலாளி, நாலு வேலி நிலம், தாமரைக் குளம் ஆகியன பொதுவுடமைக் கருத்துக்களின் தாக்கம் கொண்டவையாக அமைந்தன.

கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது 1961இல் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்தார். 1996இல் கருப்பையா மூப்பனாரின் தலைமையில் பிரிந்த தமிழ் மாநில காங்கிரசில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் இந்திய தேசிய  காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,