இதை செய்தால் வெள்ளை முடி தொல்லை நீங்கும்

 


தினமும் அதிகாலை இதை செய்தால் வெள்ளை முடி தொல்லை நீங்கும்

சிறு வயதிலேயே முடி நரைக்க டென்ஷன் ஒரு முக்கிய காரணமாகிறது. இதனை சரி செய்ய விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக, சமையலறையில் இருக்கும் பொருட்களின் மூலம் இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக்க முடியும்.


ன்றைய காலக்கட்டத்தில், சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டால் பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். அதன்படி வெள்ளை முடியை மறைக்க கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது முடியை இன்னுமும் சேதப்படுத்துகிறது.

சிறு வயதிலேயே வெள்ளை முடி
முடியை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம். பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. எனவே உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க வீட்டு வைத்தியம்

1. வெந்தயத்தை இரவில் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பேஸ்ட் செய்து, தலையில் தடவி, வந்தால், முடியின் வெண்மை மறையும்.


2. உங்கள் தலைமுடியை மீண்டும் கருமையாக்க விரும்பினால், 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். இப்போது இந்த தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும்.

3. முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தயம் அதிகம் பயன்படுகிறது, இதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால், விரைவில் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும். இது தவிர, வெந்தயம் முடி உதிர்வதைத் தடுப்பதிலும் மிகவும் பயன் அளிக்கிறது.

4. வெந்தயத்தை அரைத்து பொடியை தயார் செய்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவவும். இதனால் இளமையிலேயே வரும் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்.

5. தேங்காய் எண்ணெய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும் என்பது நாம் அறிந்ததே, இதனுடன் வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி வந்தால், முடி வெள்ளையாக மாறுவது மட்டுமல்லாமல், முடி உதிர்தல் மற்றும் பொடுகும் தொல்லை நீங்கும்.

***இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி