வரலாற்றில் இன்று





 வரலாற்றில் இன்று மே 13 – 1967. ஜாகிர்  உசேன் (Zakir Hussain) ) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆனார்.. அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது , காந்தியடிகளின் தீவிர பற்றாளரானார். காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்த்து. கல்வித்துறையில் அவர் பணியாற்றியபோது ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார். இந்தியநாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1926 முதல் 1948 வரை பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள். பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும்இருந்தார். 1962 ல் மே மாதத்தில் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வுபெற்றார். 1967 ல் இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளே அப்பதவியிலிருந்த அவர் 1969 மே மாதம் 3 ஆம் நாள் காலமானார்.

அவர் ஆங்கிலம் இந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார்.இம்மூன்று மொழிகளிலும் ஆதாரக்கல்வி முறை குறித்தும் கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். பிளேட்டோவின் குடியரசு என்ற நூலை உருது மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளார்.

ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,