ஒபாமாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று.

 அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் தலைமுடியை 2009-ம் ஆண்டு ஒரு சிறுவன் தொட்டுப் பார்த்தபோது, அந்தக் காட்சி புகைப்படமாகப் பிடிக்கப்பட்டது. உயர் கல்வியை முடித்த நிலையில் தற்போது அந்தச் சிறுவனுடன் ஒபாமா, இணையவழியில் பேசிக்கொண்ட விஷயம் வைரலாகி வருகிறது





.

ஐந்து வயதுச் சிறுவன் ஜேக்கப் பிலடெல்பியா, தன் பெற்றோர் மற்றும் சகோதரனுடன், 2009-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான ஒபாமாவை சந்திக்க ஓவல் அலுவலகத்துக்குச் சென்றுள்ளான். அப்போது ஜேக்கப், ஒபாமாவிடம், `நம் இருவரின் முடியும் ஒன்றுபோல இருக்கிறதா' என்று கேட்டிருக்கிறான்.
ஜேக்கப்புடன் உரையாடும் ஒபாமா...ஜேக்கப்புடன் உரையாடும் ஒபாமா...
அவனது ஆர்வத்தைக் கண்ட ஒபாமா, குனிந்து, சிறுவனிடம் தன் தலைமுடியைத் தொட்டுப்பார்க்கும்படி கூறினார். அந்தச் சிறுவன், ஒபாமாவின் தலைமுடியைத் தொட்டுத் தடவிப்பார்க்கும் அந்தக் காட்சி புகைப்படமாக்கப்பட்டது.
ஒபாமாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று. தற்போது உயர்கல்வியை முடித்துள்ள ஜேக்கப்பை, இணைய வழியில் தொடர்புகொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பழைய நினைவுகளைப் பற்றி பேசியதோடு, ஜேக்கப்புக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
நன்றி: விகடன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,