கலைவாணரும் பூட்டும்

 கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன்


கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட் டில் வெளிக் கதவு சாத்தியிருந் தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும். வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான்.
வாசலில் நின்று பார்த்த என். எஸ்.கிருஷ்ணன் வழிமறித்து, "இங்கே வாடா, தம்பீ...' என்று அழைத்ததும், மிகவும் சாதுவாக அவர் முன் வந்து நின்றான் பையன். "தம்பி, பையில் என்ன இருக்கு?' என்று கேட்டார். "ஒண்ணுமில்லையே!' என் றான்.
"காட்டு, பார்க்கலாம்!' என்று அவன் சட்டைப் பையில் கை விட்டார். பூட்டு! கையும், களவுமாக பிடிபட்டவன், அவரிடம் மன்னிப்பு கேட்டான்.
"ஏண்டா, எடுத்தே?' என்றார். "பசி, பழைய சாமான் கடையில் போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும். சாப்பிடலாம்ன்னு எடுத்தேன்!' என்று உள்ளதைச் சொன்னான்.
அப்போது வெளியே வந்த வீட்டுக்காரர், கதவில் பூட்டு இல்லாததைப் பார்த்து விட்டார். தெருவில் என்.எஸ்.கிருஷ்ணன் பையனுடன் பேசிக் கொண் டிருப்பதைப் பார்த்தார். அவன் தான் எடுத்திருப்பான், என். எஸ்.கே., பிடித்துக் கொண்டார் என்ற எண்ணத்தில் ஆத்திரத் தோடு வந்தார், பூட்டைப் பறி கொடுத்த வீட்டுக்காரர்.
என்.எஸ்.கே.,யை கெஞ்சும் தோரணையில் பார்த்தான் பையன். எதிர் வீட்டுக்காரர் வந்ததும், என்.எஸ்.கே., சிரித்தபடி, "வாங்க... வாங்க... பூட்டைத் தேடறீங் களா? ஒரு பையன் தூக்கிட்டு ஓடினான். தம்பி, அவனை விரட்டிப் பிடித்துப் பூட்டைப் பறிச்சிக்கிட்டு வந்தான். நான் வாங்கி வைச்சிருக்கேன். "இந்தாங்க பூட்டு, பாவம், பையன் கஷ்டப்பட்டான். அதுக் காக ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்...' என்றவர், பையனிடம், "டேய், தம்பி கொடுப் பாரு; போயி வாங்கிட்டுப் போ!' என்றார்.
பாவம்! அவனுக்கு பசி நீங்க இரண்டு ரூபாய்க்கு வழி பிறந்தது.
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்