ஒரு பொம்பிளை எப்படி இப்படியெல்லாம் எழுதலாம்?’னு கண்டனம்
"68ல நான் எழுத ஆரம்பிச்சேன். 70ல ‘எதற்காக’னு என்னோட முதல் நாவல் வந்தது. கணவன், மனைவியை ‘ஹாய்’, ‘டார்லிங்’னு பேசறதெல்லாம் அப்ப இல்லை. நானும், என் கணவரும் அப்படிப் பேசிக்கிட்டோம். அதை வச்சு அப்படியே எழுதினேன்.
அதையே கேள்வி கேட்டாங்க. 71ல என்னோட முதல் பயணக்கதையில ஹோமோசெக்ஷுவல்ஸ் பத்தி எழுதினப்ப, ‘ஒரு பொம்பிளை எப்படி இப்படியெல்லாம் எழுதலாம்?’னு கண்டனம் எழுப்பினாங்க. இன்னும் நான் பார்த்த திருமணம் தாண்டின தகாத உறவு பத்தி, திருமணமாகாமலேயே குழந்தை பெத்தவங்களுக்கான ஹோம் பத்தியெல்லாம் எழுதினப்ப, ‘அவளே அப்படித்தான் போல... மோசமான கேரக்டர் போல...’னு விமர்சனங்கள் வந்திருக்கு.
சாவி மாதிரியான பத்திரிகை ஆசிரியர்கள் காலத்துல இளம் பெண் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தற விதமா எங்களோட படங்களை அட்டையில போடற ட்ரெண்ட் இருந்தது. அட்டையில படத்தைப் போட்டுக்கிட்டு, இளமையையும் பெண்மையையும் காட்டி பேரெடுக்கிறதாகக்கூட விமர்சனங்கள் வந்திருக்கு. 75க்குப் பிறகு என் மீதான விமர்சனங்கள் குறைய ஆரம்பிச்சது. எல்லா பத்திரிகை ஆசிரியர்களும் எனக்கு நல்ல மேடை போட்டுக் கொடுத்தாங்க. அதனாலதான் என்னால துணிஞ்சு எழுத முடிஞ்சது.’’
- சிவசங்கரி
நன்றி: குங்குமம் தோழி
Comments