உலக பட்டினி தினம்
உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று அப்போதே பாரதியார் பாடினார்.
ஆனால், உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது
2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு சரி்ந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றைவிட இந்தியாவில் பட்டினியால் வாடுவார் அதிகரித்துள்ளனர். இதுதான் கார்போரேட்டுகளோடு டீல் போட்டுகொண்டு அவர்களுக்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் சாதனை. இந்தியாவைவிட மோசமாக ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமே உள்ளன மோடி ஆட்சி நீடிக்குமானால் இந்தியா உலகின் கடைசீ இடத்துக்கு போகும் என்பது நிச்சயம். வளர்ச்சியில் வேறுபாடு, உள்நாட்டில் பிராந்தியங்களில் சமநிலையின்மை, மாவட்டங்கள், சமூகங்களிடையே சமத்துவமின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பட்டினிக் குறியீடு அதிகரித்துள்ளது
Comments