வேறாயொன்று./கவிதை
#வேறாயொன்று 👥
அகத்தின் மாறுபாட்டிலல்ல
அவயங்களின் பயன்பாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிளவுபட்டுக் கிடக்கிறோம்
பாரெங்கும் சூழல விட இரண்டெனவும்...
படுத்துறங்கும் இருட்டிற்கெனவும்
உள்ளுறைத்தேடலை சொல்வடித்து வசிக்கவொன்றும்...
உண்டு பசித்து செரிக்கவாகவொன்றும்
நெஞ்சத்து மொழிகளை மூளைக்கு கடத்தும் கருவியாகவிரண்டும் நகராத சொற்களின் காய்ந்த அடைப்புகளோடு இரண்டும்
அணைக்கவும் எழுதி நனைக்கவும் பத்து
அசையாது மறுக்கவும் குறைசுட்டவுமொன்று
ஆக,
சேர்ந்து நிறையவெனவொன்று
பிரித்துக் கொட்டவே மற்றொன்று
#அன்புத்தோழி_ஜெயஸ்ரீ 💐
Art by : Sehir bilgin
Comments