என் இடம் இது என்கிற புரிதல் பெண்களுக்கு அவசியம்

 விருதுகள் மீதெல்லாம் பெரிதாக எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் பல விருதுகளின் பின்னணியில் அரசியல் இருக்கிறது. இங்கே ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாக பெண் எழுத்தாளர்களுக்கும் சிறந்த முறையில் அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் அதனை ஆண் எழுத்தாளர்களால்தான் ஜீரணிக்க முடியவில்லை.


இதையெல்லாம் தாண்டி பெண்கள் தங்கள் மனத்தடைகளை சமூகத்தடைகளை உடைத்து மனதில் தோன்றும் விஷயங்களை எழுத வேண்டும். இதை எழுதலாமா, எழுதக்கூடாதா, பிரச்னை வருமா, என்றெல்லாம் யோசிக்காமல் தோன்றுகிற விஷயங்களை எழுத வேண்டும். இது மட்டும் தான் பெண் எழுத்து என சுருங்கி போகக்கூடாது. தேங்கி போகக்கூடாது. பெண்களும் இந்த சமூகத்தின் ஒரு பாதி. சமூகத்தின் ஆழமான பரவலான விஷயங்களை நோக்கி பெண்கள் போக வேண்டும்.
யதார்த்தவாத படைப்புகள்தான் பேசப்படும். படைப்பாளிகளிடம் ஆழமான தேடல் உணர்வு இருக்க வேண்டும். எழுத்தில் புது விஷயங்களை நிகழ்த்திப் பார்க்க வேண்டும். நமக்கு தோன்றும் நேர்மையான விஷயங்களை எழுத வேண்டும். அந்த எழுத்து தகுதியானதா என்பதை காலம் முடிவு செய்யும். பெண் என்கிற தாழ்வுணர்ச்சியில் இருந்து பெண்கள் வெளியே வரவேண்டும்.
‘நீ பொம்பள தானே’ என்று மத்தவங்க சொல்வதை விடவும் பெண்கள் மனதிலே ‘நாம் பொம்பளதானே ஆம்பளைகளுக்கு ஈடாக முடியுமா?’ என்கிற எண்ணம் இருக்கிறது. அதில் இருந்து வெளியே வர வேண்டும். நம்மை தாழ்த்திக்கொள்ளக் கூடாது, நம்மை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். என் இடம் இது என்கிற புரிதல் பெண்களுக்கு அவசியம். அப்போதுதான் பெண்ணின் தனித்துவம் ஆண்களுக்குப் புரியும்.
- கவிஞர் சல்மா

நன்றி: குங்குமம் தோழி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,