இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான்
இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான் என்று பேரறிவாளன் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில்,
"இரும்புக் கம்பிகள்
இளமையைத் தின்று தீர்த்தபிறகு
ஒரு மனிதன் வெளியே வருகிறான்
தமிழ்நாட்டு அரசுக்கும்
உச்ச நீதிமன்றத்திற்கும்
வணக்கம்
பேரறிவாளனுக்குத் திறந்த
அதே வாசல் வழியே
சம்பந்தப்பட்ட ஏனையோரும்
வெளிவருமாறு
வெளிவர வேண்டும்
நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு”
என்று அதில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
நன்றி: தினத்தந்தி
Comments