இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!!

 இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!!

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் காணாமற்போகும் மூன்று குழந்தைகளில் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்படுவதே இல்லை என்றும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அவ்வாறு காணாமற் போகும் குழந்தைகள் பெரும்பாலோனோர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளாக மாறுகின்றனர் அல்லது மாற்றப் படுகின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் டெல்லியும் அடுத்த இடத்தில் மகராஷ்ட்ராவும் உள்ளன.. மூன்றாவது இடத்தில் நம் தமிழகம் உள்ளது.குழந்தைகளைத் தொலைத் தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார்/தகவல் அளிக்க வேண்டும். இந்தப் புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் தொடர்பு கொண்டு குழந்தை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். www.trackthemissingchild.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,