தமிழ்நாடு போல அருமையான பாதுகாப்பான ஒரு இடம் இந்தியாவில் இல்லை

 


சில நாட்களுக்கு முன் இப்தார் நிகழ்வில் முதல்வர் அவர்களோடு கலந்து கொண்டு விட்டு வீடு திரும்ப ஆட்டோ பிடித்தேன். அந்த பையன் ஒரிசாவை சார்ந்தவன். பேசியபடி வந்தேன் . சில வருடங்கள் ஓட்டல்களில் வேலை செய்து விட்டு இப்போது ஆட்டோ, டாக்சி, ஓட்டுவதாக சொன்னவன் , தமிழ்நாடு போல

அருமையான
பாதுகாப்பான ஒரு இடம் இந்தியாவில் இல்லை. பல மாநிலங்களில் சுற்றி விட்டு இங்கு வந்து ஐந்தாண்டுகளாக தங்கிவிட்டேன். அங்கெல்லாம் எங்களை அடித்தே கொல்கிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என நான் இங்கே செட்டில் ஆகி விட்டேன். இந்த மக்களும் நல்லவர்கள், சொந்த ஊரை விட இந்த மாநிலத்தில் நிம்மதியாக வாழ்கிறேன். வருடம் ஒரு முறை ஊருக்கு போய் பெற்றோர் மனைவி பிள்ளையை பார்ப்பேன்
என்றான். பெயர் என்ன என்றேன். முகமது, கிருஸ்ணா. அப்பா முஸ்லிம் அம்மா இந்து. இரண்டு பேரையும் வைத்து கொண்டேன். நோன்பு வைத்திருக்கிறேன்.
விழிப்புணர்வுக்காக காரை பல மாநிலங்கள் எடுத்து பயணித்திருக்கிறேன். உங்கள் தலைவர் என்னை அழைத்து வாழ்த்தினார். அடுத்த ஒரு விழிப்புணர்வு பயணம் காஷ்மீர் வரை செல்ல வேண்டும். டோல் கட்டணம் திமுக சார்பில் செய்வார்களா என்றான்.
ஏற்பாடு செய்வதாக சொன்னேன்.
சல்மா முகநூல் பதிவில்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,