பாக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவுநர் உமா அபர்ணா அவர்கள் நூல் வெளியீட்டு விழா

 எழுத்தாளர். பிரபா  மேடத்தால்  தொடங்கப் பெற்றது சங்கப் பலகை. இதன் ஆண்டு விழா   கோயமுத்தூரில் 22,05,2022 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. சங்கப் பலகையின்  தூண்களான பிரபா மேம், அவர்களது தாயார் ,திரு.சுரேஷ்சந்த், எழுத்தாளர். கணேஷ்பாலா, எழுத்தாளர். ரிஷபன், எழுத்தாளர். சப்தரிஷி லா. சா. ராமாமிருதம் ஆகியோரின்  ஆசிகளோடு கோவையில் உள்ள பசு வண்ணன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பாக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவுநர் உமா அபர்ணா அவர்கள் நூல் வெளியீட்டு விழாவை நடத்தினார். 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆன்மிக மர்ம எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் க்ரைம் ஸ்டோரி மன்னன் திரு. ராஜேஷ் குமார் அவர்களும் வந்திருந்து ,நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினர்.  இவ் விழாவில் முனைவர் தா.பேகம் அவர்களுடைய 'சந்தனக்கூப்பு' எனும் புதினமும்; முனைவர் அ.திலகவதி அவர்களுடைய 'யாதுமாகி' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.மற்றும்

சேலம்சுபா அவர்களின் சிறுகதைத் தொகுப்பு #உறவுச்சங்கிலி வெளியிடப்பட்டது
 இவ்விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். தா. பேகம் அவர்கள் எழுதிய சந்தனக் கூப்பு புதினம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் வாழ்கின்ற மலைவாழ் மக்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பெற்ற புதினம் ஆகும். இந்நாவலில் ஆளுமைகளின் விவரிப்புகள் அர்த்தமுள்ள தாக்குகின்றன. அதேவேளையில் வாழ்க்கையில்  கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை யதார்த்தத்தோடு எடுத்துச் சொல்கிறது. மானுடத்தின் விளிம்பில் உள்ள மலைவாழ் மக்களின் நான்கு பரம்பரைகளின் வாழ்வியலை ஒன்றும் குறைவுபடாமல் வெளிக்காட்டுவதோடு நாட்டுப்புறவியலையும் மானுடவியலையும் நிலைநிறுத்த முயல்கிறது இந்நாவல். மலையாளி என்பவர் யார்?  அவரது வாழ்வியல் சடங்கு முறைகளும் நாட்டுப்புற மருத்துவ முறைகளும் இணை  நோக்கில் வெளிப்படுத்தி இருப்பது கூடுதல் கவனம் கொள்ள வைக்கிறது. இயற்கையோடு பிணைந்திருக்கிற மலையாளிகளின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஒருங்கே காட்டும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது. அதேபோல் மலைவாழ் மக்க களிடையே தற்போது தற்சார்பு நிலை ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட நாவல் தயங்கவில்லை. கதைக்குள் கதை என எடுத்துரைக்கும் பாங்கு கைதேர்ந்த நாவலாசிரியராகவே எடுத்துக்காட்டுகிறது. நாவலாசிரியர்  தா.பேகம்  அவர்களை மனதார வாழ்த்துவதோடு மட்டுமின்றி மொத்தத்தில் சந்தனக்கூப்பு நாவல் மணக்கிறது

. அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,