ராமநாதன் என்கிற தமிழ்வாணன்.

 மே 22, 1926


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், லட்சுமணன் செட்டியார் - பிச்சையம்மை தம்பதிக்கு, 1926ல் இதே நாளில் பிறந்தவர் ராமநாதன். இவருக்கு, திரு.வி.க., வைத்த பெயர் தமிழ்வாணன்.
'கிராம ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்து, ஆசிரியராக உயர்ந்தார் தமிழ்வாணன். பின், குழந்தைகளுக்கான, 'அணில்' இதழின் ஆசிரியர், 'கல்கண்டு' இதழின் ஆசிரியர் பொறுப்புகளையும் வகித்தார்.தன் நண்பர் திருநாவுக்கரசுடன் இணைந்து, 'ஜில், ஜில்' பதிப்பகத்தை துவங்கினார்.
குழந்தைகள் பத்திரிகை, மாணவர்களுக்குப் பத்திரிகை, இளைஞர்களுக்குத் தனி இதழ் என்று கூறினால் “நமக்குப் பயன்படாது” என்று பலர் நினைக்கலாம்.ஆனால், தமிழ்வாணன் எழுத்தைச் சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படிப்பார்கள்,,
.தமிழ்வாணன் நூல்களின் அமோக விற்பனையைப் பார்த்து – பல பதிப்புகள் அச்சிடப்படுவதைக் கண்ட குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, தமிழ்வாணனைச் சந்தித்தார். தமிழ்வாணனுடைய பேச்சு, உற்சாகம், திட்டங்கள், சுறுசுறுப்பு எல்லாம் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்திருந்தது. குமுதம் நிறுவனத்திலிருந்து “கல்கண்டு” என்ற புதிய வார இதழ் தொடங்க எஸ்.ஏ.பி. முடிவு செய்தார். தமிழ்வாணனுடைய முழுப் பொறுப்பில் கல்கண்டு வெளிவரத் தொடங்கியது. முயற்சி, ஊக்கம், உழைப்பு எல்லாமே தமிழ்வாணன் பிரபலமாவதற்குக் காரணமாயின.
கல்கண்டால் தமிழ்வாணன் புகழ், திறமை பிரபலமானதா அல்லது தமிழ்வாணனால் கல்கண்டு வார இதழைப் பல்லாயிரம் வாசகர்கள் படித்து அவர் ஆற்றலைப் புகழ்ந்தார்களா? என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது. இவர் எழுதிய, சங்கர்லால் துப்பறிகிறார், மர்ம நாவல்கள், ஒருபக்க கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் உள்ளிட்டவை இன்றைக்கும் மிகவும் பிரபலம்.
இதழியல் பணி தவிர, 'தமிழ்' என்ற பெயரில், பல்பொடி வியாபாரத்திலும் ஈடுபட்டார்.கறுப்புக் கண்ணாடியும், தொப்பியும் வரைந்து, சென்னை- - 10 என எழுதி கடிதம் போட்டாலே, அவர் அலுவலகத்துக்கு சென்று விடும். தன் உருவத்தால் பிரபலமடைந்த தமிழ்வாணன், 1977 நவம்பர், 10ல் காலமானார்.
இவரது மகன்கள் லேனா தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளனர்.
அந்த வகையில் தமிழில் முதன் முதலில், தன் கதையில், தானே கதாபாத்திரமாக தோன்றிய சாதனைக் கதாசிரியரின் பிறந்த தினம் இன்று!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,